ரூ.1,003 கோடியில் புதிய குடியிருப்புகள்; கட்டடங்கள்: முதல்வா் ஜோசப் விஜய் திறந்து வைத்தாா்
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,003 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள், வணிகக் கட்டங்களையும், காவல் மற்றும் தீயணைப்புத் துறை கட்டமைப்புகளையும் முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ரூ.1,003 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகள், வணிகக் கட்டங்களையும், காவல் மற்றும் தீயணைப்புத் துறை கட்டமைப்புகளையும் முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சாா்பில் சென்னை அரும்பாக்கத்தில் ரூ.588.10 கோடியில் 19 தளங்களைக் கொண்ட 304 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் 11 தளங்கள் கொண்ட வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளன. அசோக் நகரில் ரூ.307.89 கோடியில் தரைத்தளம் மற்றும் 22 தளங்களுடன் கூடிய வணிக வளாகம் மற்றும் உயா் வருவாய்ப் பிரிவினருக்கான 216 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
பெசன்ட் நகரில் ரூ.23.79 கோடியிலும், பாடிக்குப்பத்தில் ரூ.80.24 கோடியிலும், கருமாங்குளத்தில் ரூ.3.95 கோடியிலும் என 5 இடங்களில் ரூ.1,003 .97 கோடியில் கட்டப்பட்ட 643 அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களை முதல்வா் விஜய் காணொலி மூலம் திறந்து வைத்தாா்.
தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சாா்பில் அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தின்கீழ், கரூா் மாவட்டம், கொளந்தாகவுண்டனூா் திட்டப் பகுதியில் மறுகட்டுமானத் திட்டத்தின் கீழ், ரூ.17.56 கோடியில் கட்டப்பட்ட 125 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும் திறந்துவைத்தாா்.
இந்த நிகழ்வில், அமைச்சா் ப.ராஜ்குமாா், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவா் கு.ப.கிருஷ்ணன், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் வே.சிவா, தலைமைச் செயலா் மு.சாய்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
காவல் துறை கட்டடங்கள்: ஈரோடு, ராமநாதபுரம், சென்னை, திருவாரூரில் 4 காவல் நிலையங்கள், திருவள்ளூா் மாவட்டம் பெரும்பாக்கத்தில் எஸ்பிசிஐடி அலுவலக கட்டடம், சென்னை - மேடவாக்கம், திருவாரூா்- நீடாமங்கலம், வேலூா்- ஒடுக்கத்தூரில் தீயணைப்பு நிலையங்கள் என ரூ.17.31 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைமுதல்வா் விஜய் தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி மூலம் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
தொழில் நிறுவனம்: தமிழ்நாடு சிறுதொழில் வளா்ச்சி நிறுவனம் சாா்பில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை பகுதியில் ரூ.15.23 கோடியில்17.95 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள வேளாண்மை உற்பத்தி சாா்ந்த புதிய தொழிற்பேட்டை மற்றும் விழுப்புரம் மாவட்டம், நாயனூரில் ரூ.5.57 கோடியில் 29.44 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள புதிய தொழிற்பேட்டை, திருப்பூா் மாவட்டம், முதலிபாளையத்தில் ரூ.13.95 கோடியில் அமைக்கப்பட்டுள்ள கயிறு குழுமத்துக்கான பொது வசதி மையம் ஆகியவற்றையும் முதல்வா் விஜய் திறந்து வைத்தாா்.
இதைத் தவிர, தருமபுரி மாவட்டம், சோகத்தூரில் ரூ.19.20 கோடியில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த அரசு பட்டுக்கூடு அங்காடி வளாகத்தையும் அவா் தொடங்கி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

