நகராட்சி துறை பணி நியமன முறைகேடு! கே.என். நேருவின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!அன்பில் மகேஸுக்கு நவ. 4 வரை போலீஸ் காவல் தவெக ஆட்சியில் புதைக்கப்பட்ட தமிழ்நாட்டின் வளர்ச்சி: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு!உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம்: முதல்வர் விஜய் திறந்து வைத்தார்!

ரூ. 23 கோடியில் கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்.

cm vijay

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய். - படம்: TNDIPR

Updated On :

ரூ. 23 கோடியில் கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் விஜய் இன்று (நவ. 2 ) திறந்து வைத்தார்.

அரசு விழாவில் பங்கேற்று, முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் சி. ஜோசப் விஜய், திங்கள்கிழமை (நவ. 2) காலை புதுக்கோட்டை வந்தடைந்தார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், சாலை வழியாக புதுக்கோட்டைக்கு வந்த நிலையில், அந்த மாவட்ட எல்லையான மாத்தூரில் முதல்வர் விஜய்க்கு தவெகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

புதுக்கோட்டையில் முதல்வர் ஜோசப் விஜய் பங்கேற்கும் அரசு விழாவுக்காக தயார் செய்யப்பட்ட பிரம்மாண்ட அரங்கை விட்டுவிட்டு, ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் விழா நடத்தப்பட்டது.

இந்த விழாவில், ரூ. 24.5 கோடியில் கட்டப்பட்ட புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம், ரூ. 4 கோடியில் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கம் உள்பட மாவட்டத்தில் நிறைவடைந்த திட்டப் பணிகளை முதல்வா் விஜய் தொடக்கி வைத்தார்.

மேலும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசின் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இதனையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக இன்றைய நாள் மாவட்டம் முழுவதும் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Summary

Chief Minister Vijay inaugurated the new bus stand in Pudukkottai, built at a cost of Rs. 23 crore, today (Nov. 2).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.