உண்மையைப் பேசுவதில் அரிச்சந்திரனுக்கே டஃப் கொடுக்கும் தவெக ஆட்சி! அப்படி என்னதான் சொன்னார்கள்?சோப்ளாங்கி என்றால் என்ன அர்த்தம்? வைரலாகும் வார்த்தை!முரசு புயல் எச்சரிக்கை! சென்னையில் கடல் சீற்றம்; அலைகள் 2.1 மீ. உயரம் எழும்!சென்னைக்கு 180 கி.மீ. தொலைவில் முரசு தீவிரப் புயல்! எங்கே, எப்போது கரையைக் கடக்கும்?முரசு புயல் எங்கே இருக்கிறது? சென்னைக்கு ஜாக்பாட் அடிக்குமா?முரசு புயல்: சென்னையில் 11 விமான சேவைகள் ரத்து!கனமழை: சென்னைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!புதுக்கோட்டை, ஈரோட்டில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் திடீர் இடமாற்றம்!ஆம்னி பேருந்துகள் முன்பதிவுக்கு புதிய செயலி அறிமுகம்!

புதுக்கோட்டை வந்தார் முதல்வர் விஜய்

முதல்வர் ஜோசப் விஜய், திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வந்தடைந்தது பற்றி...

CM Vijay arrived in Pudukkottai

புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்.

Updated On :

அரசு விழாவில் பங்கேற்று, புதிய பேருந்து நிலையம், நவீன உள்விளையாட்டரங்கம் உள்ளிட்ட முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைப்பதற்காக முதல்வர் ஜோசப் விஜய், திங்கள்கிழமை காலை புதுக்கோட்டை வந்தடைந்தார்.

சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர் சாலை வழியாக புதுக்கோட்டைக்குப் புறப்பட்டார். புதுக்கோட்டை மாவட்ட எல்லையான மாத்தூரில் அவருக்கு தவெகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

குறிப்பாக இந்தப் பகுதி விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருகிறது என்பதால், முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட தவெக செயலருமான சி. விஜயபாஸ்கர் ஏற்பாட்டில் ஏராளமானோர் திரண்டு வரவேற்பளித்தனர்.

இதேபோல, மண்டையூர், கீரனூர் பகுதிகளிலும் ஏராளமான பொதுமக்கள் திரண்டிருந்து முதல்வர் விஜய்க்கு வரவேற்பு அளித்தனர். இந்தப் பகுதிகளும் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள் வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து நார்த்தாமலை, சிப்காட் பகுதிகளில் மக்களின் வரவேற்பை ஏற்றுக் கொண்டு சுமார் ஒன்றரை மணி நேரப் பயணமாக புதுக்கோட்டை நகருக்குள் நுழைந்தார்.

அவருடன், அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, ஜா. முகமது பர்வேஸ் உள்ளிட்டோரும் வந்தனர்.

Summary

Chief Minister Joseph Vijay arrived in Pudukkottai on Monday morning to attend a government event and inaugurate completed project works, including a new bus stand and a modern indoor stadium.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.