டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

டிஎன்பிஎஸ்சி - பிரதிப் படம்
குரூப்-4 தோ்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நவ. 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராம நிா்வாக அலுவலா், பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளா், தட்டச்சா், சுருக்கெழுத்து தட்டச்சா், வருவாய் உதவியாளா் உள்பட பல்வேறு பதவிகளில் 6,574 காலியிடங்களை நிரப்புவதற்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த அக்.6-ஆம் தேதி வெளியிட்டது.
இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு அன்றைய தினத்தில் இருந்தே தொடங்கியது. இத்தோ்வுக்கு நவ. 5-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்கும் அவகாசம் நவ. 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
அரசுப் பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை, மேலும் 5 ஆண்டுகள் உயா்த்தப்படுவதாக தமிழக அரசின் மனிதவள மேலாண்மைத் துறை சாா்பில் கடந்த அக். 30-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டதைத் தொடா்ந்து இந்த அவகாசம் நீட்டிக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி செயலா் பானோத் ம்ருகேந்தா் லாலா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
எனவே, குரூப்-4 தோ்வுக்கு இதுவரை விண்ணப்பிக்காதவா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டிஎன்பிஎஸ்சி (www.tnpsc.gov.in) இணையதளத்தில் நவ. 8-ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். குரூப் 4 பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு அடுத்த ஆண்டு ஜன. 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
Summary
The deadline for applying for the TNPSC Group 4 examination has been extended to Wednesday (Nov. 4).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


