டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ: இவ்வளவு பேர் தேர்வெழுத வரவில்லையா?
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 92,000 பேர் வரவில்லை என தகவல்

டிஎன்பிஎஸ்சி தேர்வு - பிரதிப் படம்
டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் சுமார் 92,000 பேர் தேர்வுக்கு வரவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று (நவ. 1) மாநிலம் முழுவதும் 1,647 தேர்வு மையங்களில் நடைபெற்றது. காலை 9 மணிக்குத் தொடங்கி நண்பகல் 12.30 மணி வரை நடைபெற்றது.
காலியாகவுள்ள 846 பணியிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் இந்த முதல்நிலைத் தேர்வுக்கு 4,89,885 பேர் விண்ணப்பித்தனர். 846 பணியிடத்துக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருக்கும் நிலையில், ஒரு பணியிடத்துக்கு சராசரியாக 579 பேர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், இன்று நடைபெற்ற தேர்வுக்கு 92,595 பேர் வராத நிலையில், 3,97,293 பேர் தேர்வு எழுதினர்.
Summary
92,000 candidates who applied for the TNPSC Group-2 and 2A preliminary examination remained absent
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

