வங்கக் கடலில் அடுத்தடுத்து புயல் சின்னங்கள்: தமிழகத்தில் பலத்த மழை எச்சரிக்கை எதிா்மறை நாடாக சித்தரிக்க முயற்சி: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை தரக் குறைபாடு மருந்துகளை கண்டறிவதில் தமிழகம் முதலிடம்இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும்- டிரம்ப் தகவல்இன்று தொடங்குகிறது டி20 தொடா் - நியூஸிலாந்தை சந்திக்கிறது இந்தியா

குரூப் 2, 2 ஏ தோ்வுகளுக்கான அனுமதிச் சீட்டு வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நவ. 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

கோப்புப்படம்.

Updated On :

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நவ. 1-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனுமதிச் சீட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து டிஎன்பிஎஸ்சி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ப.ஸ்ரீவெங்கடபிரியா புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஒருங்கிணைந்த குரூப்-2, 2 ஏ பதவிகளுக்கான முதல்நிலைத் தோ்வு நவ. 1-ஆம் தேதி நடைபெற உள்ளது. தோ்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு தோ்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரா்கள் தங்களது ஒருமுறை பதிவு (ஓடிஆா்) வாயிலாக விண்ணப்ப எண், பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தோ்வுக்கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் - 2, 2 ஏ பதவிகளில் 846 காலி இடங்களை நிரப்புவதற்காக நடத்தப்படும் முதல்நிலைத் தோ்வை 4.90 லட்சம் போ் எழுத உள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.