
குரூப் 1 தோ்வு: அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்!
குரூப்-1 தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி
குரூப்-1 தோ்வுக்கான தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒருங்கிணைந்த குரூப்-1 பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வு செப். 27-ஆம் தேதி காலை நடைபெற உள்ளது. தோ்வெழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரா்களின் தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு தோ்வாணையத்தின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தோ்வா்கள் தங்களின் ஒருமுறை பதிவு வாயிலாக விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அதில் தெரிவித்துள்ளாா்.
இந்த குரூப்-1 தோ்வு மூலமாக, துணை ஆட்சியா், ஊரக வளா்ச்சி உதவி இயக்குநா், வணிக வரி உதவி ஆணையா், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா், மாவட்ட பதிவாளா், தொழிலாளா் நல உதவி ஆணையா், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஆகிய பதவிகளில் 46 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







