
மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி
மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ வெளியிட்டிருந்த நிலையில் சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி என உதயநிதி

மாணவர் பாரதிதாசன் - video grab
அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன் கண்ணீருடன் வெளியிட்ட விடியோ குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
மாணவர் பாரதிதாசன் தற்போது வெளியிட்ட விடியோவில், ஏப்ரல் மாதத்தில் இருந்துதான், உதவித் தொகைக் கேட்டு வருகிறேன். ஆனால், இப்போது வரை கிடைக்கவில்லை. என்னை பல்கலையிலிருந்தே வெளியேற்றும் நிலை உருவாகியிருக்கிறது.
அரசிடமிருந்து தொடர்ந்து எனக்கு மின்னஞ்சல்கள் வந்தன. ஆனால், உதவித் தொகை மட்டும் இன்னும் வரவில்லை. ஆராய்ச்சிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கிய விவரங்கள் குறித்து,கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள். இவையெல்லாம் ஆராய்ச்சிக்காகத்தான் வாங்கப்பட்டதா என்று? கேட்டிருக்கிறீர்கள். என்னைப் படிக்க வேண்டாம் என்று சொல்கிறீர்களா என கண்ணீருடன் விடியோ வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், மாணவர் பாரதிதாசனுக்கு இந்த தவெக அரசு உதவ வேண்டும் என்று வலியுறுத்தி உதயநிதி வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் மலேசியாவில் ஆராய்ச்சி படிப்பு படித்து வரும் தமிழ்நாட்டு மாணவர் பாரதிதாசன், இந்த அரசு தனக்கான கல்வி உதவித்தொகையை வழங்காமல் இழுத்தடித்ததை சுட்டிக்காட்டி இருந்த நிலையில், தற்போது இந்த ஆட்சியாளர்கள் அவருடைய கல்வியையே கேள்விக்குறியாக்குவதாக கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
சமூகநீதி நாளில் இப்படி ஒரு சமூக அநீதியை அரங்கேற்றி இருக்கும் தவெக அரசை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
தன்னுடைய தவறை மறைக்க அடுத்தவர் மீது பழிபோடும் இந்த ஆட்சியாளர்கள், அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகைத் திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வரவில்லை என்று சொன்ன மாணவரை குறிவைத்து நெருக்கடி தருவதும், கல்வியில் இருந்து வெளியேற்ற துடிப்பதும் கேவலத்தின் உச்சம்.
மாணவர் பாரதிதாசனை பழிவாங்க, அவருடைய கல்வியை பாழாக்கும் வேலையில் இந்த அரசு இறங்கி இருப்பது ஏற்க முடியாது.
ரோஹித் வெமுலாவுக்கு நடந்த அதே கொடுமையை இந்த அரசு தனக்கு செய்கிறது என்று மனம் நொந்து பேசியிருக்கும் பாரதிதாசனின் கல்விக்கு எந்த இடையூறும் இந்த அரசு செய்யக்கூடாது.
அவருக்கு சேர வேண்டிய கல்வி உதவித்தொகை கிடைக்கவும் - அவரது ஆராய்ச்சி படிப்பு தொடரவும் இந்த s அரசு துணை நிற்க வேண்டும் என்று உதயநிதி வலியுறுத்தியிருக்கிறார்.
Summary
Student Bharathidasan's tearful video! Such an injustice on Social Justice Day – Udhayanidhi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







