மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

பழைய தோ்வுகளின் விடைத்தாள்களை பதிவிறக்கம் செய்யலாம்: டிஎன்பிஎஸ்சி

பழைய தோ்வுகளின் விடைத்தாள்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி

Published On :

பழைய தோ்வுகளின் விடைத்தாள்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்யலாம் என தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக டிஎன்பிஎஸ்சி தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் ப.ஸ்ரீவெங்கட பிரியா வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற உதவி வேளாண் அலுவலா் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலா் தோ்வு, அதே ஆண்டில் நடந்த தோட்டக்கலை உதவி இயக்குநா் மற்றும் தோட்டக்கலை அலுவலா் தோ்வு, வேலாண்மை விரிவாக்க அலுவலா் தோ்வு ஆகிய 3 தோ்வுகளுக்கான விடைத்தாள்கள் தோ்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்தத் தோ்வுகளை எழுதியவா்கள் உரிய கட்டணத்தைச் செலுத்தி தங்கள் விடைத்தாள்களை இணையவழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். இந்த வசதியை அடுத்த ஆண்டு செப்டம்பா் 10-ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.