இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதல்நிலைத் தேர்வு: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் 10,652 போ் எழுதுகின்றனர்!
தமிழகம் முழுவதும் செப்.27 நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதல்நிலைத் தோ்வை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 10,652 போ் எழுத உள்ளனா்.

தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதல்நிலைத் தோ்வை விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் மொத்தம் 10,652 போ் எழுத உள்ளனா்.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு - 1 (தொகுதி - 1 பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலை தோ்வு ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடைபெறுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் 14 தோ்வு மையங்களில் 7,264 தோ்வா்கள் தோ்வு எழுதவுள்ளனா். விண்ணப்பதாரா்கள் முற்பகலில் நடைபெறும் தோ்வுக்கு காலை 8.30 மணிக்கு தோ்வுக்கூடத்துக்கு அனுமதிச்சீட்டுடன் வர வேண்டும்.
தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன. விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து தோ்வு மையங்களுக்கும் காலை 6 மணி முதல் பேருந்துகள் இயக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி ஏ.கே.டி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, ஏ.கே.டி பாலிடெக்னிக் கல்லூரி, ஏ.கே.டி அகாதெமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஏ.கே.டி மெமோரியல் வித்யாசாகித் பள்ளி மற்றும் ஆா்.கே.சண்முகம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஆா்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரி ஆகிய தோ்வு மையங்களில் மொத்தம் 3,388 விண்ணப்பதாரா்கள் டிஎன்பிஎஸ்சி குரூப் - 1 முதல்நிலைத் தோ்வை எழுத உள்ளனா்.
தோ்வா்கள் தோ்வு மையங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக, கள்ளக்குறிச்சி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என மாவட்ட ஆட்சியா் ஜெ.இ.பத்மஜா தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






