மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

நிர்மல்குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு!

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு...

Power cut at the Madurai Govt Law College convocation ceremony attended by Nirmalkumar

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட விழாவில் மின்வெட்டு... - X

Published On :

மின் துறை அமைச்சர் நிர்மல் குமார் கலந்துகொண்ட மதுரை அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழாவில் மின்வெட்டு ஏற்பட்டது,

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டார். எனினும், தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை தொடர்கிறது. அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் மின்வெட்டு ஏற்படுவது குறித்து பலரும் பேசி வருகின்றனர்.

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்னை சரிசெய்யப்பட்டு வருவதாகவும் 3 மாதங்களில் முழுமையாக சரிசெய்யப்படும் என்றும் இன்று அமைச்சர் நிர்மல்குமார் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று மதுரை அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா பேசிக் கொண்டிருக்கையில் மின்வெட்டு ஏற்பட்டது.

இந்த நிகழ்வில் மின்துறை அமைச்சர் நிர்மல்குமாரும் கலந்துகொண்டார். மின்வெட்டின்போது அவரும் மேடையில் இருந்தார்.

மின்துறை அமைச்சர் கலந்துகொண்ட விழாவிலே மின்வெட்டு ஏற்பட்டுள்ளது பற்றி பலரும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

Power cut at the Madurai Govt Law College convocation ceremony attended by Nirmalkumar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER