
ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்பு
ஸ்குவாஷ் விளையாட்டில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் அறிவித்துள்ளது குறித்து...

வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் - படம் - எக்ஸ்
ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம் ஊக்கத்தொகையை முதல்வர் விஜய் சனிக்கிழமை (செப். 26) அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் விஜய் தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
ஜப்பானில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில், ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ள ஸ்குவாஷ் வீரர்கள் ஜோஷ்னா சின்னப்பா மற்றும் வேலவன் செந்தில்குமார் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
இவ்வீரர்களின் மகத்தான சாதனையைப் பாராட்டி, தமிழ்நாடு அரசின் சார்பில் உயரிய ஊக்கத்தொகையாக தலா ரூ. 30 லட்சம் வழங்கப்படும். இவர்களது வெற்றி, தமிழ்நாட்டின் இளம் தலைமுறை விளையாட்டு வீரர்களுக்குப் புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கும்.
இவர்களைப் போன்ற திறமைமிக்க அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் தமிழ்நாடு அரசு என்றும் உறுதுணையாக நிற்கும். இவர்கள் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகள்! என்று முதல்வர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
à®à®ªà¯à®ªà®¾à®©à®¿à®²à¯ நà®à¯à®ªà¯à®±à¯à®±à¯à®µà®°à¯à®®à¯ à®à®à®¿à®¯ விளà¯à®¯à®¾à®à¯à®à¯à®ªà¯ பà¯à®à¯à®à®¿à®¯à®¿à®²à¯, ஸà¯à®à¯à®µà®¾à®·à¯ (Squash) விளà¯à®¯à®¾à®à¯à®à®¿à®©à¯ à®à®²à®ªà¯à®ªà¯ à®à®°à®à¯à®à¯à®¯à®°à¯ (Mixed Doubles) பிரிவில௠வà¯à®£à¯à®à®²à®ªà¯ பதà®à¯à®à®®à¯ வà¯à®©à¯à®±à¯ à®à®¨à¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®±à¯à®à¯à®®à¯, தமிழà¯à®¨à®¾à®à¯à®à®¿à®±à¯à®à¯à®®à¯ பà¯à®°à¯à®®à¯ à®à¯à®°à¯à®¤à¯à®¤à¯à®³à¯à®³ ஸà¯à®à¯à®µà®¾à®·à¯ வà¯à®°à®°à¯à®à®³à¯ à®à¯à®·à¯à®©à®¾ à®à®¿à®©à¯à®©à®ªà¯à®ªà®¾ மறà¯à®±à¯à®®à¯ வà¯à®²à®µà®©à¯ à®à¯à®¨à¯à®¤à®¿à®²à¯à®à¯à®®à®¾à®°à¯â¦ pic.twitter.com/uesXFRCbUX
— CMOTamilNadu (@CMOTamilnadu) September 26, 2026
Summary
Chief Minister Vijay announced on Saturday (Sept. 26) an incentive of ₹60 lakh for squash players from Tamil Nadu who won bronze medals at the Asian Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






