நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்இன்றுமுதல் அக்.1 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஇன்றும் நாளையும் வரிவசூல் மையம் செயல்படும்: மாநகராட்சி அறிவிப்புதனியாா் பால் விலை மீண்டும் உயா்வு: ஆவின், தனியாா் லிட்டருக்கு ரூ.30 வரை விலை வித்தியாசம்

ஒரு மாதத்தைக் கடந்த நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?

நேபாளப் பெருவெள்ளத்தில் சிக்கிய 85 தமிழர்களின் நிலை என்னவானது என்பது பற்றி..

பருவநிலை மாறுதலால், லாங்டாங் லிருங் சிகரத்தில் 2,000 அடி அகலம் கொண்ட பிரம்மாண்ட பனிமலை உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடியிருப்புப் பகுதிகளை சூறையாடி சென்ற பெருவெள்ளம்.

நேபாளப் பெருவெள்ளம்

Published On :

நேபாளப் பெரு வெள்ளம் ஏற்பட்டபோது, அங்கிருந்த தமிழகத்தைச் சேர்ந்த 85 பேரின் நிலை என்னவானது என்பது ஒருமாத காலம் ஆன நிலையிலும் இன்னமும் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளது. இதனால், அவர்களது குடும்பத்தினர் சொல்ல முடியாத துயரத்தில் உள்ளனர்.

திபெத்-நேபாள எல்லையில் கடந்த ஆக. 26-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் பனிப்பாறை சரிவால் போடே கோஷி ஆற்றல் பெருவெள்ளம் சீறிப்பாய்ந்து, நேபாளத்தின் மத்திய-வடக்கு மாவட்டங்களில் பேரழிவை ஏற்படுத்தியது. கரையோர கிராமங்கள், சிறு நகரங்கள் இருந்த இடம் தெரியாமல் போயின.

நேபாளத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஒரு மாதம் கடந்த நிலையிலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த 85 பக்தர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. உடல்களும் மீட்கப்படவில்லை, மீட்கப்பட்ட உடல்களிலும் அடையாளம் காணப்படாமல் இருப்பது, பெருந்துயரத்துடனும் மிகுந்த வேதனையுடனும் நாள்களைக் கழிக்கும் நிலைக்கு அவர்களது குடும்பத்தினர் தள்ளப்பட்டுள்ளனர்.

தங்களது உறவுகள் குறித்த எந்தவொரு தகவலும் கிடைக்காததால், காணாமல் போன தமிழர்களின் குடும்பத்தினர், கடந்த 15ஆம் தேதி வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் த. தென்னரசுவைச் சந்தித்து கோரிக்கை வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 21-ஆம் தேதி சிங்கப்பெருமாள் கோவிலில் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தங்கள் அன்புக்குரியவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்பது குறித்த உறுதியான தகவல் ஏதுமில்லாத நிலையில், தாங்கள் பெரும்பாலும் தனித்து நின்று போராட வேண்டிய சூழலில் விடப்பட்டுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். சிலர் நேபாளத்திற்குச் சென்று தேடுதல் பணிகளில் உதவத் தயாராக இருப்பதாகவும் கூறுகிறார்கள்.

நேபாளத்திற்கு 49 பேர் கொண்ட குழுவினரை அழைத்துச் சென்ற மகாதேவ் கைலாஷ் யாத்ரா'நிறுவனத்தின் உரிமையாளரும், குரோம்பேட்டையைச் சேர்ந்தவருமான என். மரவேல் (55), வழக்கம் போலவே, ஊடகங்களில், நேபாள வெள்ளச் சம்பவம் குறித்த கவனம் குறைந்துவிட்டது, ஒருவேளை நாங்கள் பழைய செய்தியாகிவிட்டோம் போல. சென்னை மற்றும் தமிழ்நாடு முழுவதும் தினமும் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன; அதனால் எங்கள் பிரச்னையைப் பற்றி இனி யாரும் பேச விரும்பமாட்டார்கள்" என்று மிகக் கனத்த வார்த்தைகளால் துயரத்தை வெளிப்படுத்தினார்.

சென்னையிலிருந்து 48 பேர் கொண்ட குழுவை வழிநடத்திச் சென்ற மரவேலின் மகன் என். சத்ய நாராயணனும் (28) காணாமல் போனவர்களில் ஒருவர்.

இந்தக் குழு இமயமலைப் பயணத்தை முடித்துவிட்டு, சீன குடியுரிமை பிரிவு அலுவலக வளாகத்தில் இருந்தபோதுதான் அங்கு மிகப்பெரிய வெள்ளம் ஆர்ப்பரித்து வந்து, வெறும் கட்டடடத்தை செங்கல் கட்டுமானமாக விட்டுச் சென்றிருந்தது.

தனக்கு ஆன்மீகத்தில் நம்பிக்கை இருப்பதாகவும், மகன் சத்யநாராயணன் ஜாதகப்படி, அவர் உயிருடன்தான் இருப்பார், தொடர்புகொள்ள முடியாத இடத்தில் சிக்கியிருக்கலாம் என்று நம்புகிறோம். அவர் திரும்பி வருவார் என்று எதிர்பார்த்து அவரது ஒன்பது மாதக் குழந்தை காத்திருக்கிறது என்கிறார் கண்ணீரோடு.

நேபாளம் சென்று காணாமல் போனவர்களின் குடும்பத்தினர், மரபணு சோதனைக்காக ரத்த மாதிரிகளையும் கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை ஒரு உடல்கூட அடையாளம் காணப்படவில்லை.

தங்களது ரத்த மாதிரிகள் நோபளம் சென்றடைந்துவிட்டது என்ற தகவல் மட்டுமே கிடைக்கப்பெற்றது. அதன்பிறகு வேறெந்த தகவலும் கிடைக்கவில்லை. யாரையும் குறைகூட விரும்பவில்லை. தகவலுக்காக காத்திருக்கிறோம். ஆனால் இன்னும் எத்தனை நாள்கள் காத்திருக்க வேண்டும் என்று சொன்னால் போதும் என்கிறார்கள் பலரது குடும்பத்தினர்.

ஒரு 17 வயது சிறுவனின் பெற்றோர், நேபாளம் சென்று காணாமல் போன நிலையில், அவனை கவனித்துக் கொள்ளவும், குடும்ப பொறுப்புகளை ஏற்கவும் யாரும் முன்வரவில்லை. இப்போது அவனது படிப்பு மட்டுமல்ல, வாழ்க்கையே கேள்விக்குறியாகி நிற்கிறது. அவன் வீட்டு மின்சார கட்டணத்தைக் கூட யாரும் இல்லை என்கிறார்கள் அக்கம் பக்கத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலையைச் சேர்ந்த ஆர். மணிகண்டன் (34) என்பவர் பேசுகையில், எங்களது பெற்றோர் காணாமல் போயிருக்கிறார்கள். எங்களுக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. நாங்கள் முழுமையாகத் தமிழக அரசையே நம்பியுள்ளோம் என்கிறார்.

தனது தாய் ஆர். சிவயோகம் (65) நேபாளம் சென்று காணாமல் போயிருக்கிறார். ஆனால், தற்போது நேபாளத்தில் தேடுதல் பணிகள் நிறுத்தப்பட்டுவிட்டன என்று அறிகிறோம். தமிழ் தெரிந்தவர்கள் உதவியோடு அங்கிருக்கும் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ய வலியுறுத்தியிருக்கிறோம் என்கிறார் அவரது மகள் அனிதா.

மயிலாடுதுறையைச் சேர்ந்த உதயகுமார், தன்னுடைய மனைவி ராஜேஸ்வரி (62) இல்லாதது வீட்டை மட்டுமல்ல, என் வாழ்க்கையையும் வெறுமையாக்கியுள்ளது. நான் தினமும் அவருக்காகப் பிரார்த்தனை செய்து வருகிறேன். இதைத் தவிர நான் வேறு என்ன செய்ய முடியும்? என்கிறார்.

ஒரு மாதம் கடந்த நிலையில், தங்களது உறவுகள் நிலை என்ன என்று தெரியாமல், தமிழகத்தில் தவிக்கும் குடும்பத்தினருக்கு தமிழக அரசு உதவி செய்ய வேண்டும், பாதிக்கப்பட்ட சிறுவனின் கல்வி மற்றும் வாழ்வாதாரத்துக்கு உதவ வேண்டும் என்பதே வலுவான கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER