மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

இந்திய வரலாற்றில் முதல்முறை... ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிக்கு முன்னேறி அனாஹத் சிங் சாதனை!

ஆசிய விளையாட்டில் வரலாற்றுச் சாதனை படைத்த இந்திய வீராங்கனை அனாஹத் சிங் குறித்து...

Nagoya: India�s Anahat Singh, front, competes against Japan�s Satomi Watanabe during the women�s singles semifinal Squash match in the ongoing 20th Asian Games, in Nagoya, Japan, Saturday, Sept. 26, 2026. (PTI Photo/Arun Sharma (PTI09_26_2026_000086A)

இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் ( நீல உடை) - படம்: பிடிஐ

Published On :

ஆசிய விளையாட்டில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் இறுதிக்கு முன்னேறி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதியில் இந்திய வீராங்கனையும் தரவரிசையில் 17ஆவது இடத்தில் இருக்கும் அனாஹத் சிங் - தரவரிசையில் 6ஆவது இடத்தில் இருக்கும் ஜப்பானின் சடோமி வடானபே உடன் மோதினார்.

இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 3-2 ( 9–11, 11–13, 12–10, 11–6, 11–3) என்ற கேம்களில் வென்றார். முதலிரண்டு கேம்களை இழந்தாலும் தன்னம்பிக்கையை விடாமல் அடுத்தடுத்த கேம்களில் கம்பேக அளித்து அசத்தினார்.

இந்த வெற்றியின் மூலமாக, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வரலாற்றிலேயே முதல்முறையாக ஸ்குவாஷ் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனையாக அனாஹத் சிங் சாதனை படைத்துள்ளார்.

காலிறுதிப் போட்டியில் மற்றுமொரு இந்திய வீராங்கனையை அனாஹத் சிங் தோற்கடித்தார். இதுவரை இந்திய அணி 3 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலத்துடன் 27 பதக்கங்களை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Anahat Singh becomes the first Indian female squash player in history to reach the Women’s Singles final at the Asian Games

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER