பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

மீண்டும் சீனாவுடன் தோல்வி: வெண்கலத்துடன் வெளியேறியது இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி!

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்ற இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி குறித்து...

Indian men's badminton team

இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி - படம்: எக்ஸ் / சாய் மீடியா

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் அரையிறுதியில் சீனாவிடம் தோல்வியுற்று, இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறியது.

முன்னதாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பும் இதே சீனாவிடம் இறுதிப் போட்டியில் தோல்வியுற்று வெள்ளிப் பதக்கத்துடன் வெளியேறியது இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி என்பதும் நினைவுகூரத்தக்கது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் நடைபெற்று வருகின்றன. இதில் இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி சீனா அணிகளுடன் மோதியது.

இரண்டு ஒற்றையர், இரண்டு இரட்டையர் பிரிவுகளிலும் இந்தியா - சீனா மோதியது. இதில் சீனா மூன்றில் வென்றது. இதில் இந்தியர்கள் இரட்டையினர் பிரிவில் சாத்விக் - சிராஜ் ஹெட்டி இணையினர் மட்டுமே வென்று ஆறுதல் அளித்தனர்.

40 ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ச்சியாக இந்திய ஆடவர் பாட்மின்டன் அணி ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்று அசத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

முன்னதாக 1982 மற்றும் 1986ஆவது எடிஷனில் தொடர்ச்சியாக வெண்கலம் வென்றிருந்தார்கள். பெரிதும் எதிர்பார்த்த லக்‌ஷயா சென் 16-21, 18-21 எனத் தோல்வியுற்றார். ஆயுஷ் ஷெட்டி 19-21, 13-21 என்ற கேம்களில் தோல்வியுற்றார்.

சாத்விக் - சிராக் 21-11, 22-20 என்ற கேம்களில் அசத்தல் வெற்றியைப் பெற்றார்கள். மற்றுமொரு இணையில் தமிழக வீரர் ஹரிஹரன் பங்கேற்றிருந்தார். அதில் ஹரிஹரன் - அர்ஜுன் இணையினர் 16-21, 21-17, 9-21 என்ற கேம்களில் தோல்வியுற்றார்கள்.

Summary

Asian Games 2026: Indian men’s Badminton team claim bronze after going down to China in semis

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER