பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பரவிவரும் டெங்கு காய்ச்சல்; மக்களின் உயிரோடு விளையாடும் தவெக அரசுக்கு இபிஎஸ் கண்டனம்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

அழுத்தம் முழுமையாக நீங்கி, இலகுவாக உணர்கிறேன்: மீராபாய் சானு

ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது குறித்து மீராபாய் சானு பேசியிருப்பதாவது...

Nagoya: India’s Mirabai Chanu competes in the Women’s 49kg Group A weightlifting final match during the 20th Asian Games, in Nagoya, Japan, Wednesday, Sept. 23, 2026. (PTI Photo/Arun Sharma)(PTI09_23_2026_000088A)

மீராபாய் சானு - படம்: பிடிஐ

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு அவர் பேசும்போது, “தற்போது மிகவும் இலகுவாக உணர்க்கிறேன். ஏனெனில், என்னிடம் அழுத்தம் முழுமையாக வெளியேறிவிட்டது” எனக் கூறியுள்ளார்.

இதில், 49 கிலோ பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 198 கிலோ (87 கிலோ + 110 கிலோ) எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு, பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பளுதூக்குதலில் பிரிவில் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி பதக்கம் வென்றிருந்தார்.

இந்த நிலையில், 32 வயதான மணிப்பூரைச் சேர்ந்த மீராபாய் சானு பதக்கம் வென்றது குறித்து கூறியிருப்பதாவது:

12 ஆண்டுகளாக நான் ஆசைப்பட்ட பதக்கம் கிடைத்துவிட்டது. தற்போது மிகவும் இலகுவாக உணர்க்கிறேன். ஏனெனில், என்னிடம் அழுத்தம் முழுமையாக வெளியேறிவிட்டது.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வெல்வது எனது கனவு. ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்தேன், தற்போது ஆசிய போட்டியிலும் வெள்ளி வென்றுள்ளேன். எனது வாழ்க்கை இப்போது முழுமைப் பெற்றுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஆசிய விளையாட்டு நடைபெறும்போதும் முடிந்த பின்பும் எனக்கு என்னானது என்று என்னையே கேட்டுக்கொள்வேன்! ஆனால், இந்த முறை என்னால் முடிந்ததைச் சிறப்பாகச் செய்துள்ளேன்.

என்னான ஆனாலும் இந்த முறை பதக்கம் வெல்ல வேண்டுமென வந்திருந்தேன். உடல் எடையைக் கூட்டுவது பலத்தைக் குறைக்கும். பலத்துடன் சேர்ந்து உடல் எடையைக் கூட்டுவதில் கவனம் செலுத்துகிறேன். 49 கிலோவில் உடல் எடையைத் தொடருவது சற்று சிரமம்தான்.

எதாவது தவறு செய்தால் என்னாகும் என சிந்தித்தால் அது எனக்கு அழுத்தத்தைக் கொடுக்கும். மறுபுறம் நான் எனது பலத்தை பெருமையாக கருதுகிறேன். என் மீது எனக்கு தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் இருக்கிறது என்றார்.

Summary

Pressure completely gone from me, I am feeling very light: Mirabai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.