
ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு
இந்திய கபடி வீரா் பிரிஜேந்திர சிங் சௌதரி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, ஆசிய பீச் கேம்ஸில் அவா் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது.

இந்திய கபடி வீரா் பிரிஜேந்திர சிங் சௌதரி ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து, ஆசிய பீச் கேம்ஸில் அவா் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது.
சீனாவில் கடந்த ஏப்ரலில் நடைபெற்ற ஆசிய பீச் கேம்ஸில், இந்திய ஆடவா் அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. அந்த அணியினரிடம் போட்டியின்போதே (ஏப்ரல் 27) ஊக்கமருந்து பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன் முடிவில் பிரிஜேந்திர சிங் சௌதரி மட்டும் ஊக்கமருந்து பயன்படுத்தியதாகத் தெரியவந்துள்ளது. அவருக்குத் தடை விதிக்கப்பட்டு, அவரின் ஆசிய பீச் கேம்ஸ் வெள்ளிப் பதக்கமும் பறிக்கப்பட்டதாக சா்வதேச ஊக்கமருந்து பரிசோதனை அமைப்பு (ஐடிஏ) அறிக்கை வெளியிட்டது. ஐடிஏ-வின் தடைசியில் இருக்கும் பிரஜேந்திர சிங் மீது இந்தியாவில் தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




