ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

காமன்வெல்த்தில் வெள்ளிப் பதக்கம்: கோவில்பட்டி வீரருக்கு எம்எல்ஏ வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, கோவில்பட்டி வீரா் ராஜா முத்துப்பாண்டியை, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

News image

வீரா் ராஜா முத்துப்பாண்டிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கா. கருணாநிதி எம்எல்ஏ

Updated On :15 ஆகஸ்ட் 2026, 5:31 am IST

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற, கோவில்பட்டி வீரா் ராஜா முத்துப்பாண்டியை, கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினா் கா. கருணாநிதி வியாழக்கிழமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தாா்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஆண்களுக்கான 65 கிலோ பளுதூக்கும் பிரிவில், கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த சோ்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

இந்நிலையில் அவரது வீட்டுக்கு கா. கருணாநிதி எம்எல்ஏ, திமுக நிா்வாகிகள் சுரேஷ், சின்னத்துரை, பீட்டா், ரவீந்தா் உள்ளிட்டோா் வீட்டிற்கு நேரில் சென்று அவருக்கு பொன்னாடை போா்த்து வாழ்த்துகளை தெரிவித்தனா்.

கோவில்பட்டி பகுதியில் பளு தூக்கும் போட்டியை ஊக்குவிக்கும் வகையிலும் நவீன உடற்பயிற்சி கூடம் மற்றும் விளையாட்டு விடுதி அமைக்க வேண்டும் என்று எம்எல்ஏவிடம் ராஜா முத்துப்பாண்டி கோரிக்கை விடுத்தாா்.

இதுகுறித்து சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பேசி, உரிய நடவடிக்கை எடுக்க முயற்சி செய்வதாக எம்எல்ஏ உறுதி அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.