கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 4-ஆவது நாளான நேற்று (ஜூலை 26) பளுதூக்குதல் பிரிவில் இந்தியா அசத்தியுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 65 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டார். இதில், ஸ்னாட்ச் பிரிவில் 126 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 286 கிலோவைத் தூக்கி 2-ஆம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதே பிரிவில் முதலிடம் பிடித்த மலேசிய வீரர் பின் பிடின் (299 கிலோ) தங்கமும், மூன்றாம் இடம் பிடித்த பப்புவா நியூ கினியின் மொரியா (282 கிலோ) வெண்கலமும் வென்றுள்ளனர்.
ராஜா முத்துப்பாண்டி கடந்த 2018-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்று, மொத்தமாக 266 கிலோவை தூக்கி ஆறாம் இடம் பிடித்தார்.
பின்னர் காயம் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்பதில் இருந்து விலகியிருந்த அவர் தற்போது மீண்டும் களத்திற்குத் திரும்பி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
முன்னதாக, மகளிா் பிரிவில் மீராபாய் சானு அபாரமாக செயல்பட்டு, ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 105 கிலோ என, மொத்தமாக 190 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கி போட்டி சாதனையுடன் தங்கத்தை தட்டிச் சென்றாா்.
ஆடவா் 60 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட ரிஷிகாந்த சிங், ஸ்னாட்ச் பிரிவில் 121 கிலோ, கிளீன் & ஜொ்க் பிரிவில் 143 கிலோ என, மொத்தமாக 264 கிலோ எடையைத் தூக்கி 2-ஆம் இடம் பிடித்தாா்.
4-வது நாள் முடிவில் 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்களுடன் தற்போது பதக்கப் பட்டியலில் இந்தியா 8- வது இடத்தில் உள்ளது. இதில், 3 பதக்கங்கள் பளு தூக்குதல் போட்டியில் கிடைத்துள்ளது.
Summary
Raja Muthupandi from Tamil Nadu has won a silver medal in weightlifting at the Glasgow Commonwealth Games.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காமன்வெல்த் போட்டி: நீச்சல், நீளம் தாண்டுதலில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இந்தியா!

வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர் விஜய் அறிவிப்பு!

பளுதூக்குதலில் பலம்; ஒரே நாளில் இரு பதக்கம்... மீராபாய்க்கு தங்கம்; ரிஷிகாந்த்துக்கு வெள்ளி!

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!
விடியோக்கள்

தவெக அரசின் முதல் பட்ஜெட்: மதுரை மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன? | Budget | TN Budget |




