சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ள வாழ்த்து குறித்து...

News image

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து - எக்ஸ்

Updated On :27 ஜூலை 2026, 1:16 pm IST

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில், 23-ஆவது காமன்வெல்த் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிகளின் 4-ஆவது நாளான நேற்று (ஜூலை 26) பளூதூக்குதல் பிரிவில் இந்தியா அசத்தியுள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர் ராஜா முத்துப்பாண்டி 65 கிலோ எடைப் பிரிவில் களம் கண்டார். இதில், ஸ்னாட்ச் பிரிவில்126 கிலோ, க்ளீன் & ஜெர்க் பிரிவில் 160 கிலோ என மொத்தமாக 286 கிலோவைத் தூக்கு 2-ஆம் இடம்பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இதனைத் தொடர்ந்து, தமிழக வீரர் ராஜா முத்துப்பாண்டிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,

“#CWG2026-இல் 65 கிலோ பிரிவு பளுதூக்கும் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜா முத்துப்பாண்டிக்கு என் பாராட்டுகள்.

தென் தமிழ்நாட்டில் இருந்து உலக அளவில் மேலும் பல சாதனையாளர்கள் புறப்பட்டு வர ராஜா முத்துப்பாண்டி வெற்றி ஊக்கமளிக்கட்டும்! கல்வியோடு விளையாட்டிலும் நம் இளைஞர்கள் சிறக்கட்டும்!” என அவர் கூறியுள்ளார்.

Summary

Weightlifter Thiru Raja Muthupandi won Silver Medal in Common Wealth Games M.K. Stalin congratulates...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.