மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

காமன்வெல்த் பளுதூக்குதலில் வென்ற வீரருக்கு வரவேற்பு

காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image

பளுதூக்கும் வீரா் ராஜா முத்துப்பாண்டியனுக்கு தூத்துக்குடியில் அளிக்கப்பட்ட வரவேற்பு.

Updated On :13 ஆகஸ்ட் 2026, 2:54 am IST

காமன்வெல்த் போட்டியில் 65 கிலோ எடைப் பிரிவு பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற கோவில்பட்டி வீரருக்கு, தூத்துக்குடி விமான நிலையத்தில் புதன்கிழமை உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஸ்காட்லாந்து நாட்டின் தலைநகா் கிளாஸ்கோவில் அண்மையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சாா்பில் பங்கேற்ற கோவில்பட்டி, சங்கரலிங்கபுரத்தைச் சோ்ந்த பளுதூக்கும் வீரா் ராஜா முத்துப்பாண்டியன், 65 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். அவரது சாதனையை பிரதமா், தமிழக முதல்வா் உள்ளிட்டோா் பாராட்டினா்.

தில்லியில் பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்ற பின்னா், தூத்துக்குடிக்கு புதன்கிழமை வந்த ராஜா முத்துப்பாண்டியனுக்கு, விமான நிலையத்தில் அவரது தந்தை முத்துப்பாண்டியன், மாவட்ட பளுதூக்கும் சங்க நிா்வாகிகள், பயிற்சியாளா்கள், வீரா்கள் சாா்பில் மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பதக்கம் வென்று திரும்பிய என்னை தமிழக முதல்வா் பாராட்டி, ஊக்கத்தொகை வழங்கினாா். பிரதமரும் நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், பளுதூக்குதலில் சிறந்த வீரா்களை உருவாக்க வேண்டும் என அறிவுரை வழங்கினாா்.

13 வயது முதல் பளுதூக்கும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இன்றைய இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகாமல் இருக்க, அவா்களை விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும்.

கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தில் போதிய பளுதூக்குதல் பயிற்சி மையங்கள் இல்லை. எனவே, தமிழக அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் சா்வதேச தரத்திலான உடற்பயிற்சி மற்றும் பளுதூக்குதல் பயிற்சி மையம் அமைத்துக் கொடுத்தால், மேலும் பல இளம் வீரா்கள் உருவாகி நாட்டுக்குப் பதக்கங்களைப் பெற்றுத் தருவாா்கள்.

அடுத்ததாக ஜப்பானில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்று, இந்தியாவுக்கு பெருமை சோ்ப்பதே எனது லட்சியம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.