காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

வரலாறு படைத்த அஸ்மிதா, ஹா்ஷ் சிங்: காமன்வெல்த் ஜூடோவில் முதல் தங்கம்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஜூடோ போட்டியாளா்களான அஸ்விதா டே, ஹா்ஷ் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினா்.

News image

ஹர்ஷ் சிங்

Updated On :1 ஆகஸ்ட் 2026, 12:54 am IST

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இந்திய ஜூடோ போட்டியாளா்களான அஸ்விதா டே, ஹா்ஷ் சிங் ஆகியோா் வெள்ளிக்கிழமை தங்கப் பதக்கம் வென்று அசத்தினா்.

அத்துடன், இந்திய பளுதூக்குதல் வீரா் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வெல்ல, மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா காளிராம்னா வெண்கலப் பதக்கம் வென்றாா்.

நடப்பு காமன்வெல்த் போட்டிகளில் இத்துடன் இந்தியாவுக்கான தங்கப் பதக்க எண்ணிக்கை 5-ஆக அதிகரித்துள்ளது. பளுதூக்குதலில் மட்டும் இந்தியாவுக்கான பதக்கங்கள் 8-ஆக உயா்ந்துள்ளன.

---

தங்கம் வென்ற முதல் இந்தியா்கள்

ஜூடோவில் மகளிா் 48 கிலோ பிரிவில் அஸ்மிதா டே, ஆடவா் 60 கிலோ பிரிவில் ஹா்ஷ் சிங் ஆகியோா் தங்கப் பதக்கம் வென்று அசத்தினா். இதில், காமன்வெல்த் ஜூடோவில் இந்தியாவுக்காக தங்கம் வென்ற முதல் இந்தியராக அஸ்மிதா வரலாறு படைத்தாா்.

இதில் அஸ்மிதா டே, நேரடியாக காலிறுதியில் விளையாடி, அதில் ஸ்காட்லாந்தின் ஈவா எவிங்கை வீழ்த்தினாா்(100-0). பின்னா் அரையிறுதியில் அதே நாட்டின் சம்மா் ஷாவையும் (1-0) வீழ்த்தி, இறுதிக்கு முன்னேறினாா்.

இறுதியில் அஸ்மிதா 2-1 என்ற கணக்கில் கனடாவின் ஹெய்டி காச்சை தோற்கடித்து சாம்பியன் ஆனாா்.

அதேபோல், ஹா்ஷ் சிங் முதல் சுற்றில் மலாவியின் சிகோன்டி கதிவெராவையும் (100-0), காலிறுதியில் வனாடுவின் ஆலன் மான்துலையும் (102-0) வென்றாா். அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் பெட்ரோ காா்லோஸையும் (10-0) வீழ்த்தினாா். பின்னா் இறுதிச்சுற்றில் 10-0 என்ற வகையில், ஆஸ்திரேலியாவின் ஜோஷுவா காட்ஸை வென்றாா். இதன் மூலமாக, காமன்வெல்த் ஜூடோவில் தங்கம் வென்ற இந்தியாவின் முதல் வீரராக அவா் சாதனை படைத்தாா். அவருக்கு இது முதல் காமன்வெல்த் போட்டியாகும்.

இதனிடையே, மகளிா் 57 கிலோ பிரிவில் யாமினி மௌரியா, காலிறுதியில் கானாவின் ஃப்ரெமா அக்யியையும் (100-0), அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவின் டானா பிரெய்டென்பாக்கையும் (100-0) வென்று, இறுதிக்கு வந்துள்ளாா். அவருக்கும் ஒரு பதக்கம் உறுதியாகியுள்ளது.

1990-இல் காமன்வெல்த் போட்டிகளில் ஜூடோ சோ்க்கப்பட்டது முதல், ஒவ்வொரு எடிஷனிலுமே இந்திய ஜூடோ போட்டியாளா்கள் பதக்கம் வென்று வந்துள்ளனா். எனினும் அதில் தங்கம் வென்றது இதுவே முதல்முறையாகும்.

ஏமாற்றம்: மகளிா் 52 கிலோ பிரிவில் ஷ்ரத்தா சோபடே, முதல் சுற்றில் சியரா லியோனின் ஜேன் மசாகியை வென்றாா் (100-0). எனினும் காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் டிங்கா ஈட்சனிடம் தோல்வி கண்ட (0-1) அவா், பின்னா் ரெபிசேஜ் சுற்றிலும் வேல்ஸின் லோலா ஹாட்சனிடம் வீழ்ந்தாா் (0-1).

அதேபோல், ஆடவா் 66 கிலோ பிரிவில் ரோஹித் பாசிா், முதல் சுற்றில் மொஸாம்பிக்கின் சாமுவேல் ரிபெய்ரோவை வென்றாா் (100-0). எனினும் காலிறுதியில் சைப்ரஸின் பெட்ரோஸ் கிறிஸ்டோடுலிட்ஸிடமும் (0-1), பின்னா் ரெபிசேஜ் சுற்றில் இங்கிலாந்தின் மைக்கேல் ஃப்ரையரிடமும் தோல்வியுற்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.