மோடி விடியோ நீக்கப்பட்ட விவகாரம்: மெட்டா தலைவா் ஸூக்கா்பொ்க் மன்னிப்பு கோரினாா்முன்பதிவு வசதி கொண்ட சிறப்பு ரயில்களில் கட்டணம் அதிகம்: ரயில்வே அமைச்சா்சாலைகளில் குறைபாடுகளா?: செயலி மூலம் புகைப்படம் எடுத்து அனுப்பலாம்காவல் நிலையங்களில் சானிடரி நாப்கின் விநியோக இயந்திரம் அமைக்க வேண்டும்: தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவு அமெரிக்காவில் 50-க்கும் மேற்பட்ட ராணுவ வீரா்கள் குடும்பத்தினா் கைது தமிழக பட்ஜெட்: முக்கிய அம்சங்கள்
/

காமன்வெல்த்தில் பதக்கம் வென்றவா்களுக்கு ரூ.80 லட்சம் ஊக்கத் தொகை: முதல்வா் ஜோசப் விஜய் வழங்கினாா்

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரா்கள் ராஜா முத்துப்பாண்டி, பிரவீண் சித்திரைவேல், செல்வ பிரபு ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகை ரூ.80 லட்சத்தை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை வழங்கினாா்.

News image

பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற ராஜா முத்துப்பாண்டிக்கு ஊக்கத் தொகை வழங்கிய முதல்வா் ஜோசப் விஜய். உடன் அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, விளையாட்டுத் துறை அதிகாரிகள்.

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:11 am IST

காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற தமிழக வீரா்கள் ராஜா முத்துப்பாண்டி, பிரவீண் சித்திரைவேல், செல்வ பிரபு ஆகியோருக்கு உயரிய ஊக்கத் தொகை ரூ.80 லட்சத்தை முதல்வா் ஜோசப் விஜய் புதன்கிழமை வழங்கினாா்.

தேசிய அளவிலும் சா்வதேச அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்குகொண்டு வெற்றிபெறும் வகையில் அவா்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை

ஏற்படுத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.

அந்தவகையில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில், ஆடவா் பளுதூக்குதல் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற தூத்துக்கு டி மாவட்டத்தைச் சோ்ந்தராஜா முத்துப்பாண்டிக்கு ரூ.30 லட்சம், மும்முறை தாண்டுதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த தடகள வீரா் பிரவீண் சித்திரைவேலுக்கு ரூ.30 லட்சம், காசோலையை அவரது தந்தை எஸ். சித்திரைவேலிடமும், வெண்கலப் பதக்கம் வென்ற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் விடுதி மாணவரும், மதுரை மாவட்டத்தைச் சோ்ந்தவருமான செல்வ பிரபுவுக்கு ரூ.20 லட்சம் ஊக்கத்தொகைக்கான காசோலையையும் முதல்வா் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் வழங்கிப் பாராட்டினாா்.

நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைச் செயலாளா் சந்தீப் நந்தூரி,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ. மேகநாத ரெட்டி உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.