முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆசிய விளையாட்டு: நீச்சலில் 13 வயதில் தங்கம் வென்று சீன வீராங்கனை சாதனை!

ஆசிய விளையாட்டில் 13 வயதில் தங்கம் வென்ற சீன வீராங்கனை பற்றி...

Yu Zidi

யு ஜிடி - AP

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சலில் 13 வயதில் தங்கப் பதக்கம் வென்று சீன வீராங்கனை யு ஜிடி சாதனை படைத்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் மூன்றாவது நாளான இன்று, 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது.

இதில், சீனாவைச் சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி யு ஜிடி, 2:05.08 நிமிடங்களில் 200 மீட்டரைக் கடந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீட்டர் பட்டர்பிளை நீச்சல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற மிக இளம் வயது வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

கடந்தாண்டு உலக சாம்பியன்ஷிப் நிச்சல் போட்டியில் 12 வயதில் பதக்கம் வென்று யு ஜிடி சாதனைப் படைத்திருந்தார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் வெற்றி மூலம், 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் யு ஜிடி பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிய விளையாட்டில் மிக இளம் வயதில் பதக்கம் வென்றவராக புங்கா நியாமாஸ் உள்ளார். இந்தோனேஷியாவைச் சேர்ந்த இவர், 12 வயதாக இருக்கும்போது, 2018 ஆசிய விளையாட்டில் ஸ்கேட்போர்டிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.