ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா விலகியுள்ளார்.
20-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானில் உள்ள நகோயாவில், செப். 19 முதல் அக். 4 வரை நடைபெறுகின்றன.
இந்த நிலையில், இந்திய மகளிரணியின் நட்சத்திர வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலிருந்து விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற 'தி ஹன்ட்ரட்' தொடரில் விளையாடியபோது ஏற்பட்ட தொடை தசைநார் காயத்தால் பாதிக்கப்பட்டு, தொடரிலிருந்து விலகினார்.
25 வயதான ரோட்ரிக்ஸுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். காயமடைந்த ஜெமிமாவுக்குப் பதிலாக பிரதிகா ராவல் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி விவரம்... ஹர்மன்பிரீத் கௌர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷஃபாலி வர்மா, ஃபுல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி. கமலினி (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, பிரேமா ராவத், ராதா யாதவ், ஸ்ரீ சரணி, ரேணுகா தாக்கூர், நந்தினி ஷர்மா, கிராந்தி கவுட், பிரதிகா ராவல்.
Summary
India women's team batter Jemimah Rodrigues was on Friday ruled out of the upcoming Asia Cup and Asian Games due to a hamstring injury she sustained earlier this month while playing in The Hundred tournament in England.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஹண்ட்ரட் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்; ஆசிய கோப்பையில் விளையாடுவாரா?

ஆசிய போட்டிகள்: தேஜாஸ் சிா்ஸே விலகல்
ஆசிய போட்டிகள் ஹாக்கி: இந்திய மகளிா் அணி அறிவிப்பு

ஆசிய போட்டிகள்: 15 பேருடன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


