நேபாளத்தின் மற்றொரு அமைச்சர் பதவி விலகல்! பிரதமர் பாலேந்திர ஷா அரசில் 3-வது ராஜிநாமா!மடப்புரம் காவலாளி அஜித்குமார் கொலை! 4 காவலர்கள் மீதான வழக்கை கொலை வழக்காக மாற்ற உத்தரவுஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரிலிருந்து ஹர்ஷித் ராணா விலகல்!ஆபரேஷன் அன்வேஷன்: 17 மாநிலங்களில் 101 குழந்தைகளை மீட்ட காவல்துறை!

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவு.

இந்திய ரூபாய்

Published On :

மும்பை: வெளிநாடுகளில் டாலருக்கு நிகரான பிற நாடுகளின் நாணய மதிப்புகள் சரிந்ததையடுத்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிலைபெற்றது.

அரசியலில் நிச்சயமற்ற சூழலில், வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறி வருவதும் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றால், இந்திய ரூபாய் மதிப்பு அழுத்தத்தில் இருப்பதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 95.39 என்ற நிலையில் வர்த்தகம் தொடங்கியது. பிறகான வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு ரூ. 95.38 முதல் 95.44 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், நேற்றைய வர்த்தக நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.42 ஆக நிறைவடைந்தது.

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 95.45 ஆக நிறைவு பெற்றது.

Summary

The rupee appreciated 3 paise to close at 95.42 against US dollar on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.