இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம்! முடிவை கைவிடுகிறதா தமிழக அரசு?மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி உதவித்தொகை விடுவிப்புஇந்திய பொருள்கள் மீது 100% வரி: மசோதாவில் கையெழுத்திட்டார் டொனால்ட் டிரம்ப்!யுபிஐ கட்டணம்! 40 காசு செலுத்தினால் செத்துவிட மாட்டீர்கள் - நீதி ஆயோக் துணைத் தலைவர்தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபுவின் உடல்நிலையில் முன்னேற்றம்!மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

ஆசிய போட்டிகள்: தேஜாஸ் சிா்ஸே விலகல்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது காயம் கண்ட இந்திய தடகள வீரா் தேஜாஸ் சிா்ஸே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

Reliance Foundation (file)

Published On :

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின்போது காயம் கண்ட இந்திய தடகள வீரா் தேஜாஸ் சிா்ஸே, ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலகுவதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகளில் ஆடவா் 110 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் பங்கேற்ற தேஜாஸ் சிா்ஸே, ஹீட்ஸில் 13.76 விநாடிகளில் இலக்கை அடைந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதிபெற்றாா்.

காமன்வெல்த் தடை தாண்டும் ஓட்டத்தில் இறுதிக்குத் தகுதிபெற்ற முதல் இந்தியராக பெருமை பெற்ற அவா், அந்தப் பந்தயத்துக்கு முன்பான பயிற்சியின்போது இடதுகால் பாதத்தில் காயம் கண்டாா்.

அதனால் அசௌகா்யத்தை உணா்ந்தபோதும் இறுதிச்சுற்றில் பங்கேற்ற அவா், 15.39 விநாடிகளில் கடைசி வீரராக இலக்கை எட்டினாா்.

இந்நிலையில், தனது இடதுகால் பாதத்தில் இரு சிறு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் செப்டம்பா் - அக்டோபரில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தன்னால் பங்கேற்க முடியாது எனவும் அவா் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.