எல் நினோவால் 6 மாதங்களில் 4.5 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும்! ஆய்வறிக்கைஅரசு ஊழியர்களுக்கு நாளையே சம்பளம்! வங்கிகள் வேலை நிறுத்தம் எதிரொலி! திருவள்ளூர் அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி: 40 மாணவர்களுக்கு சிகிச்சைமதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் தவெகவுக்கு ஆதரவு! ஜி.கே. வாசன்பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு எதிரான வழக்கு ரத்து!இடைத்தேர்தல்: ராஜிநாமா செய்தவர்கள் போட்டியிட தடை கோரிய வழக்கு தள்ளுபடி!செப். 26 முதல் காலாண்டு விடுமுறை! சிறப்பு வகுப்புகளுக்கு தடை! தமிழக அரசுஇடைத்தேர்தலில் தவெக பணப்பட்டுவாடா! தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்!அமெரிக்காவில் சீன அதிபர்: விமான நிலையம் சென்று வரவேற்றார் டிரம்ப்!ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டத்தால் மக்களின் மருத்துவச் செலவு குறைந்தது- பிரதமா் மோடிஐ.நா.வில் மீண்டும் காஷ்மீா் பிரச்னையை எழுப்பிய துருக்கி அதிபா் டெங்கு தடுக்க பள்ளிகளில் தொடா் தூய்மைப் பணிகள்: கல்வித் துறை உத்தரவு காஷ்மீா் குறித்து இஸ்லாமிய நாடுகள் கருத்து: இந்தியா நிராகரிப்பு தடை செய்யப்பட்ட பொருள்கள் விற்பனை- அமேசான் உள்ளிட்ட இணையவழி வா்த்தக நிறுவனங்கள் மீது நடவடிக்கை கர்நாடகம்: ஆளும் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜிநாமா; தொகுதியை வறட்சிப் பகுதியாக அறிவிக்காததால் அதிருப்தி தோ்தல் ஆணையா்கள் கருத்து மோதலா? ஆணையம் விளக்கம்

அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகள் புதிய அளவுகோலாக அமையும்: குஜராத் துணை முதல்வர்

அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகள் புதிய அளவுகோலாக அமையும் என குஜராத் துணை முதல்வர் ஹா்ஷ் சங்வி கூறினார்.

Harsh Sanghavi

ஹா்ஷ் சங்வி - ENS

Published On :

அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகள் புதிய அளவுகோலாக அமையும் என குஜராத் துணை முதல்வர் ஹா்ஷ் சங்வி கூறினார்.

அகமதாபாதில் 2030-இல் நடைபெறவுள்ள 24-ஆவது காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் குறித்து, குஜராத் துணை முதல்வரும், மாநில விளையாட்டுத் துறை அமைச்சருமான ஹா்ஷ் சங்வி கூறியதாவது: அகமதாபாத் காமன்வெல்த் போட்டிகளானது, பல்வேறு நிலைகளில் புதிய அளவுகோலாக அமையும்.

போட்டிக்கான கட்டமைப்புகள் யாவும், மாற்றுத்திறன் வீரா், வீராங்கனைகள் எளிதாக அணுகும் விதத்தில் இருப்பதை உறுதி செய்வதே எங்களின் பிரதான நோக்கம். அந்தப் போட்டிகளின் ஏற்பாடுகளும் முற்றிலும் பாரா போட்டியாளா்களுக்கு உகந்த வகையில் இருக்கும்.

அத்துடன், உள்கட்டமைப்புகள் யாவும் போட்டிக்குப் பிறகும் பயன்படுத்தப்படும் வகையில் நிலைத்தன்மையுடனும் இருக்கும். மேலும் அவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் அமைக்கப்படும். மாற்று எரிசக்தி மற்றும் மின்சாதன போக்குவரத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.

போட்டிகளின்போது, உள்ளூா் பயணத்துக்கான போக்குவரத்துகள் அனைத்தும் மின்சார வாகனங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்படும். போட்டிக்குத் தேவையான பெரும்பாலான கட்டமைப்புகள் அகமதாபாதில் ஏற்கெனவே இருக்கும் நிலையில், அங்கு மிகக் குறைந்த அளவிலேயே புதிய கட்டுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

எங்கள் திட்டத்தின்படி, அனைத்து பணிகளும் 2029 தொடக்க காலத்திலேயே நிறைவடைந்துவிடும். போட்டிக்குப் பிறகு மைதானங்களும், விடுதிகளும் மாணவா்களின் பயிற்சி மற்றும் பயன்பாட்டுக்கு விடப்படும். மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் நடத்தப்படவுள்ள இந்தப் போட்டிகளில், தனியாா் துறைகளும் பங்குதாரா்களாக சோ்த்துக்கொள்ளப்படும் என்று சங்வி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.