100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஆசிய விளையாட்டு: 28 ஆண்டுகள் கனவு... வெள்ளி வென்றார் மீராபாய் சானு!

ஆசிய விளையாட்டு போட்டியில் மீராபாய் சானு வெள்ளி வென்றது பற்றி...

மீராபாய் சானு - PMO India

Published On :

ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிருக்கான பளுதூக்குதல் பிரிவில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு வெள்ளி பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், மகளிருக்கான பளுதூக்குதல் போட்டி இன்று நடைபெற்றது. இதில், 49 கிலோ பிரிவில் கலந்துகொண்ட இந்திய வீராங்கனை மீராபாய் சானு, 198 கிலோ எடையைத் தூக்கி வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

வட கொரியாவின் ரி சோங் கம், 215 கிலோ எடையைத் தூக்கி தங்கப் பதக்கத்தையும், இந்தோனேசியாவின் லுலுக் டயானா டிரி விஜயனா 191 கிலோ தூக்கி வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

ஏற்கெனவே ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ள மீராபாய் சானு, முதல்முறையாக ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளார்.

மீராபாய் சானுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவரது உறுதியும் விடாமுயற்சியும் தொடர்ந்து நாட்டுக்கு ஊக்கமளிக்கின்றன. இந்தியா அவரை நினைத்துப் பெருமை கொள்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 1998ஆம் ஆண்டு, பாங்காக்கில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில், பளுதூக்குதலில் பிரிவில் இந்தியாவின் கர்ணம் மல்லேஸ்வரி பதக்கம் வென்றிருந்தார்.

சுமார் 28 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீராபாய் சானு பளுதூக்குதல் பிரிவில் பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Saikhom Mirabai Chanu wons silver in asian games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.