100% வேலை உறுதி! தவறிய கல்வி நிறுவனம்.. கல்விக் கட்டணத்தை திருப்பித் தர உத்தரவுஷார்ஜாவில் இந்தியர் கொலை.. 9 துண்டுகளாக வெட்டப்பட்ட உடல்! மனைவி, மகனை காணவில்லை!போரூர் - வடபழனி மெட்ரோ சேவை! யாருக்காகக் காத்திருக்கிறது?சிங்கப்பூர் விமானத்தில் வந்த இரு பயணிகளிடம் ரூ.2.5 கோடி தங்கம் பறிமுதல்! தொடர் மின்வெட்டு: மின்வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!உடலுறுப்பு தானம் என்பது மகத்தான மனிதநேயச் செயல்! முதல்வர் விஜய் ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்ஜி20 உச்சி மாநாட்டுக்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி! பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு ரூ. 300 கோடி நிதி வழங்கிய அமெரிக்கா!

ஆசிய விளையாட்டு: ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு வெண்கலம்!

ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் வெண்கலப் பதக்கத்தை வென்ற இந்திய மகளிர் அணியினர்.

Published On :

ஆசிய விளையாட்டு போட்டியின் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணியினர் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளனர்.

ஜப்பானின் நாகோயாவில் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியாவைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த தொடரில் இந்தியா, ஜப்பான், சீனா, தென்கொரியா, தாய்லாந்து உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், மகளிர் ஸ்கீட் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ரைசா தில்லன், மகேஸ்வரி சௌஹான் மற்றும் பரினாஸ் தலிவால் ஆகியோர் அடங்கிய அணியினர், 331 என்ற புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றினர்.

125 புள்ளிகளில் ரைசா மற்றும் பரினாஸ் இருவரும் தலா 111 புள்ளிகளையும், மகேஸ்வரி 109 புள்ளிகளையும் பெற்றனர்.

துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா தற்போது நான்கு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளது.

Summary

India secured its sixth shooting medal at the Asian Games as the women's skeet team comprising Raiza Dhillon, Maheshwari Chauhan and Parinaaz Dhaliwal won a bronze with a combined score of 331 in Nagoya on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.