ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் தங்கம் வென்றது இந்திய அணி!

ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப்பதக்கம் வென்றுள்ளதைப் பற்றி...

Published On :

ஜப்பானில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் கிரிக்கெட்டில் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளது.

ஜப்பானின் நகோயாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் மகளிருக்கான கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் மோதின.

நிஷினில் உள்ள கோரோகி விளையாட்டு பூங்காவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ர்த் கௌர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார்.

அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகள் ஸ்மிருதி மந்தனா 79 ரன்களும் (5 பௌண்டரிகள், 7 சிக்ஸர்கள்), ஷஃபாலி வர்மா 48 ரன்களும் (3 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள்), விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷ் 49 ரன்களும் (6 பௌண்டரிகள், 3 சிக்ஸர்கள்), கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் 19 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 216 ரன்கள் குவித்தது.

இலங்கை அணித் தரப்பில் சுகந்திகா குமார், தில்ஹரி, சாமுடி பிரபோதா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

பின்னர், 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி 15.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 69 ரன்களுக்கு சுருண்டது. இதனால், இந்திய அணி 147 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பதிவு செய்தது.

அதிகபட்சமாக இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபட்டு 29 ரன்களும், விக்கெட் கீப்பர் கௌசானி 14 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணித் தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட்டுகளும், ஷஃபாலி வர்மா, ஷ்ரேயங்கா பாட்டீல், ஸ்ரீசரணி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

ஆசிய விளையாட்டுப் போட்டியின் இறுதியில் வெற்றி பெற்ற இந்திய அணி தங்கப்பதக்கத்தையும், தோல்வியடைந்த இலங்கை அணி வெள்ளிப்பதக்கத்தையும் வென்றன.

Summary

The Indian women's cricket team has achieved a spectacular victory, winning the gold medal by defeating Sri Lanka at the Asian Games currently taking place in Japan.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.