முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ஆசிய விளையாட்டு: நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் அணி! முடிவு என்ன?

ஆசிய விளையாட்டு நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் அணி தோல்வி...

r madhavan son

நீச்சல் பிரிவில் நடிகர் மாதவன் மகன் வேதாந்த் அணி - Photo: Sports Authority of India

Published On :

ஆசிய விளையாட்டு ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீச்சல் போட்டியில் பங்கேற்ற நடிகர் மாதவன் மகன் வேதாந்த் அணி 9-வது இடம் பிடித்தது.

2026 ஆம் ஆண்டுக்கான ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஜப்பானின் அய்ச்சி - நகோயா பகுதியில் செப். 19 ஆம் தேதி தொடங்கியது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இப்போட்டியின் மூன்றாவது நாளான இன்று, ஆண்களுக்கான 4x200 மீட்டர் ஃப்ரீஸ்டைல் ​​ரிலே பிரிவுக்கான தகுதிச் சுற்று நடைபெற்றது.

இந்த பிரிவில் மொத்தம் 13 அணிகள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பாக சஜன் பிரகாஷ், தக்ஷன் ஷஷிகுமார், வேதாந்த் மாதவன் மற்றும் அனீஷ் சுனில் ஆகியோர் அடங்கிய குழு கலந்துகொண்டது.

7:24.32 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்த இந்திய அணி, 9-வது இடத்தை பிடித்தது. முதல் 8 இடங்களைப் பிடித்த அணிகள் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேறும் நிலையில், இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டது.

இருப்பினும், 9 இடம் பிடித்திருக்கும் இந்திய அணி ரிசர்வ் அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதிப் போட்டியில் ஏதேனும் காரணத்தால் தகுதி பெற்ற ஒரு அணியால் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கப்படும்.

நீச்சல் பிரிவில் ஏமாற்றம்

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற நீச்சல் பிரிவுகளுக்கான போட்டியில் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அளித்துள்ளனர்.

50 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் பங்கேற்ற ஸ்ரீஹரி நடராஜ் மட்டுமே இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். மற்றவர்கள் தகுதிச் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆடவர் 100 மீட்டர் பேக்ஸ்ட்ரோக் போட்டியில் ஆறாவது இடத்தைப் பிடித்த இந்தியாவின் ரிஷப் தாஸ், 25.41 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து இறுதிப் போட்டிக்குச் செல்லும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்டார். அவர் ஒட்டுமொத்தமாக 11-வது இடத்தைப் பிடித்ததுடன், மாற்று வீரராகவும் உள்ளார்.

Summary

Asian Games: Actor Madhavan's son Vedaant in the swimming squad! What is the result?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.