
மாதவன் நடித்த ஜிடிஎன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
ஜிடிஎன் படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

ஜிடிஎன் படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
மாதவன் நடித்த ஜிடிஎன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க, இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.
ஜிடிஎன் திரைப்படத்தில் மாதவனின் மனைவியாக ரங்கநாயகி என்ற பாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார்.
கடந்த ஆக. 7 ஆம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே கிடைத்தது.
மேலும் இந்தப் படத்தில், சத்யராஜ், ஜெயராம், வினய் உள்பட பிரபலங்கள் நடித்திருந்தனர். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.

ராக்கெட்ரி படத்தை தயாரித்த டிரை கலர்ஸ் பிலிம்ஸ் மற்றும் வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்துள்ளது.
இந்தியாவின் எடிசனாக அறியப்பட்ட ஜிடி நாயுடுவின் வாழ்க்கையில் அறியப்படாத பக்கங்களும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில், ஜிடிஎன் திரைப்படம் செப். 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the film GDN, starring Madhavan, has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






