
ஆர்யா - நிகிலா விமலின் அனந்தன் காடு: ஓடிடி வெளியீட்டுத் தேதி!
அனந்தன் காடு படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது தொடர்பாக...

அனந்தன் காடு போஸ்டர் - படம்: எக்ஸ்
அனந்தன் காடு படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - மலையாளம் என இரு மொழிகளில் உருவான அனந்தன் காடு திரைப்படம், கடந்த ஜூன் 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தப் படத்தை ஜியேன் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். கதை, திரைக்கதையை முரளி கோபி எழுதியுள்ளார். படத்துக்கு காந்தாரா புகழ் அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தில் நடிகர்கள் ஆர்யா, முரளி கோபி, நிகிலா விமல், இந்திரன், சுனில், ரெஜினா, தேவ் மோகன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தை எஸ். வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் மற்றும் ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இந்தப் படம் திருவனந்தபுரத்தை பின்னணியாகக் கொண்டு, அரசியல் மற்றும் பழிவாங்கலை மையமாக வைத்து, அதிரடித் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது. ஆர்யா இலங்கைத் தமிழராக நடித்துள்ளார்.
இந்த நிலையில், அனந்தன் காடு திரைப்படம் நாளை(செப். 2) அமேசான் பிரைம் மற்றும் மனோரமா மேக்ஸ் ஓடிடி தளங்களில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the movie Ananthan Kaadu has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






