
ஓடிடியில் வெளியாகும் எதிர்பாராத திருப்பங்கள் கொண்ட உளவியல் த்ரில்லர்!
உன்மத்தம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி குறித்து...

உன்மத்தம் திரைப்படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ்
மலையாள மொழித்திரைப்படமான உன்மத்தம் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரண் தாஸ் இயக்கத்தில், குஞ்சாக்கோ போபன் மற்றும் லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் வெளியான மலையாள கிரைம் த்ரில்லர் திரைப்படம் உன்மத்தம்.
மேலும் இந்தப் படத்தில், சித்திக், சுதீஷ், சாபுமோன் அப்துசமது, ரெய்னா ராதாகிருஷ்ணன், சிபி தாமஸ், விஷாக் நாயர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
சினிமா இயக்குநராக விரும்பும் காவலர்(நாயகன்), மர்மங்கள் நிறைந்த பழைய வழக்கு கோப்பை விசாரணை செய்யும்போது உண்மைக்கும் மாயைக்குமான குழப்பத்தில் சிக்கும் நாயகன் அதில் எவ்வாறு வெல்கிறார்? சினிமா பயணத்தை தொடர்ந்தாரா? எனபதே இந்தப் படத்தின் கதை.
ஷாகி கபீர் வசனங்களை எழுதியுள்ளார். பாடல்களுக்கு முஜீப் மஜீத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை ஜஸ்டின் வர்கீஸ் மேற்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தத் திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்த நிலையில், உன்மத்தம் திரைப்படம் வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the Malayalam film Unmatham has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







