
ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவுக்கு 2ஆவது பதக்கம் கிடைத்துள்ளது பற்றி...

இளவேனில் வாலறிவன்
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் தனி நபர் பிரிவில் இந்தியாவின் இளவேனில் வாலறிவன் வென்றார்.
இறுதிப் போட்டியில் 252.4 புள்ளிகள் பெற்று நூலிழையில் தங்கப் பதக்கத்தை அவர் தவறவிட்டார். இதன்மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா வென்றுள்ள 2ஆவது பதக்கம் இதுவாகும்.
ஏற்கெனவே 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய மகளிர் அணி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.
அதேசமயம் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் சீன வீராங்கனை தைச்சி 253 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். ஜப்பானின் ஐய்ச்சி-நகோயாவில் ஆசியப் போட்டி 2026 சனிக்கிழமை கோலாகலமாகத் தொடங்கியது.
இதனை ஜப்பான் பேரரசா் நருஹிட்டோ போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
ஆசியக் கண்டத்தைச் சோ்ந்த நாடுகள் பங்கேற்கும் ஆசியப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
Summary
The 27-year-old Elavenil finished with a total of 252.4 behind Japan’s Hinata Taichi who set a new Games Record of 253 to clinch the gold.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








