
ஆசிய போட்டியில் இருந்து வருண் சக்ரவர்த்தி விலகல்..! மாற்று வீரர் யார் தெரியுமா?
இந்திய சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் குறித்து...

வருண் சக்கரவர்த்தி - படம்: ஏபி
இந்திய சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயம் காரணமாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகுவதாக பிசிசிஐ தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
ஜப்பானின் அய்சி - நகோயா நகரில் வரும் 19-ஆம் தேதி தொடங்கும் 20-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இந்தியாவிலிருந்து 267 வீரா்கள், 234 வீராங்கனைகள் என, 501 போ் கொண்ட குழு பங்கேற்கிறது. அவா்கள் 36 விளையாட்டுப் பிரிவுகளில் களம் காணவுள்ளனா். இதில் 310 பேருக்கு இது அறிமுக ஆசிய போட்டிகளாகும்.
இந்த ஆசிய போட்டியில் கிரிக்கெட்டும் ஒரு பிரிவாக இருக்கிறது. இந்தப் போட்டியில் இருந்து சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்தி காயத்தினால் விலகியுள்ளார்.
வருணுக்குப் பதிலாக இரண்டு வீரர்கள் இந்தியாவின் தேர்வாக இருக்கிறது. அதில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
குல்தீப் யாதவ் இந்த மாத இறுதியில் ஒருநாள் போட்டியில் விளையாட இருப்பதால் விப்ராஜ் நிகம் தேர்வாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் தொடரிலும் காயத்தினால் வருண் சக்ரவர்த்தி விளையாடாதது குறிப்பிடத்தக்கது. 22 வயதான விப்ராஜ் நிகம் ஐபிஎல் தொடரில் தில்லி கேபிடல்ஸ் அணியில் 19 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.
பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் விப்ராஜ் நிகம் 176 ரன்கள் ஐபிஎல் தொடரில் எடுத்திருப்பதும் கவனிக்கத்தக்கது. செப்.24ல் ஆடவருக்கான கிரிக்கெட் போட்டிகள் தொடங்கவிருக்கின்றன.
Summary
Indian spinner Varun Chakravarthy ruled out of Asian Games due to injury
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








