
திகிலுட்டும் கொரியன் கனகராஜு: ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக....

கொரியன் கனகராஜு போஸ்டர். - படம்: எக்ஸ்
நடிகர் வருண் தேஜ் நடித்துள்ள கொரியன் கனகராஜு படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் வருண் தேஜ் 2014ல் முகுந்த் எனும் படத்தில் நாயகனாக அறிமுகமானார். லோஃபர், ஃபிதா, எப்ஃ2 ஆகிய திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
இவர் கடைசியாக நடித்த மட்கா திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, வருண் தேஜ் நடிப்பில் வெளியான புதிய திரைப்படம் கொரியன் கனகராஜு.
இந்தப் படத்தை மெர்லபாகா காந்தி இயக்கியுள்ளார். இதனை ஃபர்ஸ்ட் ஃபிரேம் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் யுவி கிரியேஸன் இணைந்து தயாரித்துள்ளது. தமன் இசையமைத்துள்ளார்.

இந்திய - கொரியன் பாணியிலான நகைச்சுவை கலந்து ஹாரர் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், உலகம் முழுவதும் கடந்த ஆக. 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மதுவில், கொரிய நாட்டுச் சாம்பலைக் கலந்து குடித்ததால், கனகராஜை(வருண் தேஜ்) கொரிய ஆவி ஆட்கொள்கிறது. இதனை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கொரியன் கனகராஜு திரைப்படம் செப். 4 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
Summary
The OTT release date for the film Korean Kanakaraju, starring actor Varun Tej, has been officially announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






