மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது: சிபிஐ வலியுறுத்தல்!நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!ஸ்குவாஷ் விளையாட்டில் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு ரூ. 60 லட்சம்! முதல்வர் அறிவிப்புஇன்று காஞ்சி காமாட்சியம்மன் கோயில் நடை அடைப்பு! பக்தர்கள் ஏமாற்றம்இன்ஸ்டாவில் தங்க, பணமழையை கொட்டிய பெண்! தட்டித் தூக்கிய திருடர்கள்!!வேலை நிறுத்தம் எதிரொலி! நாளை வழக்கம் போல வங்கிகள் செயல்படும்!நேபாளப் பெருவெள்ளம்: 85 தமிழர்களின் நிலை என்னவானது?மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!நுங்கம்பாக்கம் சாலைக்கு இயக்குநர் பாக்யராஜ் பெயர்

நான் முடி வெட்டிக்கொண்டால்கூட பிரச்னையா? - மேயர் பிரியா ஆதங்கம்!

தான் முடி வெட்டிக்கொள்வதுகூட பிரச்னை ஆகிறதாக மேயர் பிரியா தெரிவித்தது குறித்து...

Mayor Priya.

மேயர் பிரியா. - படம் - எக்ஸ்

Published On :

தான் முடி வெட்டிக்கொள்வதுகூட பிரச்னையாக உள்ளதாக மேயர் பிரியா ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் நேற்று (செப். 26) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தவெக அரசையும் முதல்வர் விஜய்யையும் மேயர் பிரியா கடுமையாக விமர்சித்தார்.

இதனிடையே அவர் முடி வெட்டிக்கொண்டது குறித்து சமூக ஊடகங்களில் சிலர் தங்களது கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.

இதுகுறித்து மேயர் பிரியா தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

ஏன் எனக்கு மட்டும் எப்போதும் இது நடக்கிறது? முதல் நாளிலிருந்து தற்போதுவரை, நான் எது செய்தாலும் அது சர்ச்சையாகிறது. அது சிறிய பிரச்னையாக இருந்தாலும்கூட பெரிதாகிறது.

நான் பர்கர் சாப்பிட்டாலும் பிரச்னை ஆகிறது. நான் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னை ஆகிறது. நான் எடுக்கும் என்னுடைய தனிப்பட்ட விருப்பங்கள்கூட கேள்விக்குட்படுத்தப்பட்டு அவை ஆராயப்படுவதாகத் தெரிகிறது.

நான் ஒரு பெண் என்பதாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவள் என்பதாலோதான் இப்படி நடக்கிறதோ என்று சில நேரங்களில் எனக்குத் தோன்றுகிறது. நான் சார்ந்த பிரச்னைகளில் மட்டும், பெண்ணியவாதிகளும் பெண்களுக்காகக் குரல் கொடுப்பதாகச் சொல்பவர்களும் எங்கே மறைந்துவிடுகிறார்கள் என்பது தெரியவில்லை.

அரசியலில் ஈடுபடும் பெண்கள் ஒழுக்கமற்றவர்களோ அல்லது மரியாதைக்குத் தகுதியற்றவர்களோ அல்ல. பொதுவாழ்வில் இருக்கும் ஒரு பெண்ணை அவரது தோற்றம், வாழ்க்கை முறை அல்லது தனிப்பட்ட விருப்பங்களின் அடிப்படையில் மதிப்பிடுவதற்கு யாருக்கும் உரிமை இல்லை.

ஒவ்வொரு பெண்ணுக்கும் தனக்கே உரிய கண்ணியமும் சுயமரியாதையும் தன்னுடைய வாழ்க்கையை தனது விருப்பப்படி அமைத்துக் கொள்ளும் உரிமையும் உண்டு. எனவே, மேயர் என்ற பதவியைத் தாண்டி அந்தப் பெண்ண்ணையும் மதிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Mayor Priya Rajan has stated that even getting a haircut has become an issue.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.