பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பவுடர் அமைச்சர், ஆல்வேய்ஸ் வெல்.. திமுக ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேச்சு!

பவுடர் அமைச்சர், ஆல்வேய்ஸ் வெல்.. திமுக ஆர்ப்பாட்டத்தில் மேயர் பிரியா பேசியது குறித்து..

chennai mayor priya

மேயர் பிரியா - x / mayor priya

Published On :

தமிழக முதல்வர் விஜய்யைக் கண்டித்து சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சென்னை மேயர் பிரியா அனல்பறக்கப் பேசினார்.

சட்டப்பேரவையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை அவமரியாதை செய்யும் வகையில் பேசியதாக, முதல்வர் விஜய்க்கு எதிராக இன்று தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் நடைபெற்ற திமுக ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு முக்கிய தலைவர்களும், முன்னாள் அமைச்சர்களும் உரையாற்றினர்.

அப்போது பேசிய மேயர் பிரியா, அதிக மரியாதை கொடுக்கும் இடமான பேரவையில் இன்று பவுடர் அமைச்சரு.. எதையும் ஆதாரத்துடன்தான் நான் பேசுவேன்னு பேரவையில் கத்தக்கூடிய ஒரு அமைச்சருனு இப்படிப்பட்டவர்கள்தான் இருக்கிறார்கள். இவர்கள் இப்படியென்றால், ஒரு எம்எல்ஏ பேரவையில் வந்து அ, ஆ, இ, ஈ என எழுத்துக் கூட்டி எழுத்துக்கூட்டி படிச்சி சொல்றாங்க..

இப்படிப்பட்டவர்களை வைத்துக் கொண்டு நீங்கள் எல்லாம் திமுகவினரைப் பார்த்து கேள்வி கேட்கலாமா? அந்த தகுதி இருக்கிறதா?

பேரவையில் உட்கார்ந்துகொண்டு ஆல்வேய்ஸ் வெல் சொல்லுங்க, ஆல்வேய்ஸ் வெல் சொல்லுங்கனு சொல்றாங்க. நீங்க முதலில் சொல்லுங்கள் ஆல்வேய்ஸ் வெல். யார சீண்டிப் பார்த்திருக்கிறீர்கள், எந்த மாதிரியான ஒரு கழகத்தை சீண்டிப் பார்த்திருக்கிறீர்கள் என்பது தெரியாமல் சீண்டியிருக்கிறீர்கள்.

நாங்களா ஒரு பிரச்னைக்குப் போக மாட்டோம். வரும் பிரச்னையை என்னைக்குமே விட மாட்டோம்.

பேரவைக்கு வரும் முதல்வர், 3 மணி நேரம் படத்தில் நடித்துவிட்டுப் போவது போல பேரவையில் ஒரு மணி நேரம் பேசிவிட்டுச் செல்கிறார். அங்க பாரு வானம், இங்க பாரு பூமின்னு, பேரவையில் கையை ஆட்டி ஆட்டி பேசினால்.. பேசுவது எல்லாம் உண்மையாகிவிடாது.

தமிழகத்தின் வளர்ச்சிக்கு, திமுக தலைவர்கள் எந்த அளவுக்கு பாடுபட்டிருக்கிறார்கள் என்பதை தமிழக மக்கள் பார்த்திருக்கிறார்கள். இன்று மிசா சட்டத்தைப் பற்றி நீங்கள் பேரவையில் வந்து பேசுகிறீர்கள். இந்த மிசா சட்டம்னா என்னனு உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் முதுகைக் காட்டிவிட்டு ஓடு ஓடு ஓடுன்னு ஓடிட்டு, பேரவையிலிருந்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியை போகக் கூடாது என்று சொல்கிறீர்கள். சொல்லிவிட்டு நீங்கள் ஓடிவிட்டீர்கள்.

மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறீர்கள். இதற்கான தீர்ப்பை அனைவரும் பார்ப்பீர்கள். எனவே, என் தாயைப் பழித்தவனை யார் தடுத்தாலும் விட மாட்டேன் என்று சொல்வார்கள், அது போல என் தலைவனைத் தொட்டவர்கள் யாராக இருந்தாலும் மாண்புமிகுவாக இருந்தாலும் நாங்கள் விடமாட்டோம் என்று தெரிவித்துக் கொள்கிறேன் என சென்னை மேயர் பிரியா கூறினார்.

Summary

Powder Minister, Always Well Mayor Priya speaks DMK protest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER