மேயர் பிரியாவுடன் விசிக கவுன்சிலர்கள் வாக்குவாதம்! சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு!
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் விசிக - திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம்...
மேயர் பிரியா - x
சென்னை மாநகராட்சி மாமன்றக் கூட்டம் இன்று மேயர் பிரியா தலைமையில் நடைபெற்று வருகிறது.
அப்போது, மாமன்றத்தில் அம்பேத்கரின் புகைப்படத்தை வேறு இடத்திற்கு மாற்றியதாக விசிக கவுன்சிலர்கள் மேயருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே திமுக கவுன்சிலர்களும் எழுந்து விசிக கவுன்சிலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது.
'அம்பேத்கரை நாங்கள் யாரும் ஒதுக்கவில்லை. அம்பேத்கரை யாரும் உரிமை கொண்டாட முடியாது. அம்பேத்கர் அனைவருக்குமானவர். அவரின் கொள்கைகளைக் கொண்டு திட்டங்களை கொண்டுவந்தது திமுக' என்று கூறினார்.
இறுதியாக விசிக கவுன்சிலர்கள், அம்பேத்கரின் புகைப்படத்தை வேறு இடத்திற்கு மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
மேயர் இருக்கைக்குப் பின்னால் காந்தி புகைப்படமும் அதன் வலதுபுறம் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் புகைப்படமும், அதன் இடதுபுறம் அம்பேத்கர் புகைப்படமும் இருந்துள்ளது. தற்போது அம்பேத்கர் புகைப்படத்தை எடுத்துவிட்டு அந்த இடத்தில் முதல்வர் விஜய்யின் புகைப்படத்தை வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பேத்கர் படத்தை அவையில் ஒரு மூலைக்கு மாற்றிவிட்டதாக விசிகவினர் புகார் தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.
Summary
VCK councilors argue with Mayor Priya at the Chennai Corporation meeting
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



