
அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்ட கூட்டங்களில் மின்வெட்டு!
மதுராந்தகம், தாராபுரத்தில் தவெக அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா கலந்துகொண்ட கூட்டங்களில் மின்வெட்டு ஏற்பட்டது பற்றி...
அமைச்சர் செங்கோட்டையன் கலந்துகொண்ட கூட்டத்தில் மின்வெட்டு... - X
அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் கலந்துகொண்ட கூட்டங்களில் அவர்கள் பேசிக் கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னையில் உள்ள மின் வாரிய தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று தாராபுரத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண் ராஜ் உள்ளிட்ட 5 அமைச்சர்கள் கலந்துகொண்ட தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசிக் கொண்டிருக்கும்போதே மின்வெட்டு ஏற்பட்டது. ஏற்கனவே செங்கோட்டையன் பத்திரிகையாளர் சந்திப்பின்போதும் மின்வெட்டு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதேபோல மதுராந்தகத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பங்கேற்ற ஒரு கூட்டத்திலும் அவர் பேசிக்கொண்டிருக்கும்போது மின்வெட்டு ஏற்பட்டது. உடனடியாக 'ஜெனெரேட்டர் போடுங்கள்' என்று கூற, ஜெனெரேட்டர் இயக்கப்பட்டதால் ஆதவ் தனது பேச்சைத் தொடர்ந்தார்.
தவெகவின் முக்கிய அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டங்களிலேயே மின்வெட்டு ஏற்பட்டது பேசுபொருளாகியுள்ளது.
Summary
Power outages at meetings attended by Ministers Sengottaiyan and Aadav Arjuna
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





