அதிமுகவும் நாமும் ஒன்றுதானே: பேரவையில் ஆதவ் அர்ஜுனா பேச்சு!
சட்டப்பேரவையில் தவெக - அதிமுக உறவு குறித்து பேசியது தொடர்பாக...

பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - படம்: சட்டப்பேரவை
அதிமுகவும் நாமும் ஒன்றுதான் என்று சட்டப்பேரவையில் பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசினார்.
சட்டப்பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர் தலைமையில் இன்று (செப்.1) காலை 9.30 மணிக்கு அவை கூடிய நிலையில், கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது, பூவிருந்தவல்லி தொகுதி எம்எல்ஏ பிரகாசம், “பூவிருந்தவல்லி தொகுதியில் செவ்வாய்பேட்டை ரயில்வே மேம்பாலம் பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளது. அதை விரைவில் முடித்து தருமாறு பேரவைத் தலைவர் வாயிலாக கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "திருவள்ளூர் நமது மாவட்டம், அங்கு 10-க்கு 10 வென்றுள்ளோம், சட்டப்பேரவை உறுப்பினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும்” என்றார்.
இதனிடையே, திருவள்ளூர் மாவட்டத்தின் திருத்தணியில் அதிமுக வென்றுள்ளது என எதிரில் இருந்து குரல் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பேசிய ஆதவ் அர்ஜுனா, ”10ல் 9 தொகுதிகளைக் வென்றோம், அதுவும் நம்முடையதுதானே, அதிமுகவும் நாமும் ஒன்றுதானே.
நமக்கும் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கும் இருக்கும் உறவைக் கூறினேன் என்று ” எனத் தெரிவித்தார்.
அவர் பேசியதற்கு பேரவைத் தலைவர் உள்பட உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர்.
Summary
Public Works Minister Aadav Arjuna stated in the Legislative Assembly that the AIADMK and 'we' are one and the same
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






