
கல்லூரி நிகழ்வில் மின்வெட்டு! இருளிலும் பேச்சைத் தொடர்ந்த அமைச்சர் விஸ்வநாதன்!
தஞ்சாவூரில் அமைச்சர் விஸ்வநாதன் பங்கேற்ற கல்லூரி விழாவில் மின்வெட்டு...
அமைச்சர் விஸ்வநாதன் - X
தஞ்சாவூரில் கல்லூரி நிகழ்வில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கும்போது திடீரென மின்வெட்டு ஏற்பட்டது.
எனினும் அவர் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து இருளிலேயே உரையாற்றினார்.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாகவே பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. மக்களும் பல்வேறு பகுதிகளில் சாலை வீதிகளில் வந்து மின்வெட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன், இன்று தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் கலைக் கல்லூரி விழாவில் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர் விழாவில் பேசிக் கொண்டிருந்தபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் விழா நடைபெறும் மேடை இருளாக இருந்தது. எனினும் அமைச்சர் விஸ்வநாதன் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்து உரையாற்றினார்.
Summary
Power outage at a college event in Thanjavur attended by Minister Viswanathan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







