
தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட முடியாத பாஜக அரசுக்கு கண்டனங்கள்: அமைச்சர் விஸ்வநாதன்
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட முடியாத மத்திய பாஜக அரசுக்கு அமைச்சர் பெ. விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்தது குறித்து...

உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் - கோப்புப் படம்
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட முடியாத மத்திய பாஜக அரசுக்கு காங்கிரஸ் அமைச்சர் பெ. விஸ்வநாதன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வேலூரில் செய்தியாளர்களுடன் அமைச்சர் விஸ்வநாதன் பேசியதாவது, "ஆளுநர், குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மத்திய உள்துறை அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் மட்டும் முதலில் வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும் இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என மத்திய அரசு தரப்பில் நிலைப்பாடு எடுத்திருக்கிறார்கள்.
ஆனால், தமிழ்நாட்டில் மொழி காப்பாற்றப்பட வேண்டும் என அரசு தெளிவாக உள்ளது. தமிழர்கள், தமிழறிஞர்கள், தமிழ்சார்ந்த பேராயர்கள் கட்டிக்காத்த, அறநெறி காத்த தமிழ் போற்றி வணங்கப்பட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிற காரணத்தால்தான், தமிழக அரசு விழாக்களின் மேடைகளில் முதல் பாடலாக தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாட வேண்டும் என சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை முதல்வர் விஜய் கொண்டுவந்தார்.
ஆகையால், நிச்சயமாக அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் பாடப்படும். தமிழ் மொழி முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்ற ஆசை தமிழர்களுக்கு இருக்கிறது.
மனோன்மணியம் பல்கலைக் கழகத்தில் குடியரசு துணைத் தலைவர் பங்கேற்கும் விழாவில், அவருடன்தான் ஹெலிகாப்டரில் நான் பயணித்தேன். ஆனால், பல்கலைக் கழக விழா மேடையைப் புறக்கணித்தேன்.
சாஸ்தா பல்கலைக் கழகத்தில் துணைத் தலைவர் பங்கேற்கும் விழாவில், அவருடன்தான் ஹெலிகாப்டரில் நான் பயணித்தேன். ஆனால், அந்த விழா மேடையைப் புறக்கணித்தேன். ஏனெனில், நான் ஒரு தமிழன்.
இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் (சி.பி.ராதாகிருஷ்ணன்) ஒரு தமிழர். அவர் பாஜகவை சேர்ந்தவராக இருந்தாலும்கூட, தமிழக அரசின் பிரதிநிதியாக நான் அவரை வரவேற்கிறேன். அதே சமயம், தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாட முடியாத அந்த (பாஜக) அரசுக்கு எங்களுடைய கண்டனங்களைத் தெரிவிப்பதில் மாற்றுக் கருத்தேயில்லை" என்று தெரிவித்தார்.
Summary
Condemnation of the BJP government for its inability to sing the 'Tamil Thai Vazhthu', says Minister Viswanathan
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







