முதல்வர் விஜய் நாளை திருச்சூர் பயணம்!ராகுல் தொடர்ந்த வழக்கு! ஞானேஷ் குமாருக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதல்வர் விஜய் ஆய்வு!அமைச்சர் செங்கோட்டையன் குதிரை பேரம்! ஆளுநரிடம் அதிமுக புகார்!அரிசி விலையைக் குறைக்க தேவையான நடவடிக்கை! அமைச்சர் வெங்கடரமணன்தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது!ஞானேஷ் குமாருக்கு எதிராக சென்னையில் இந்தியா கூட்டணி ஆர்ப்பாட்டம்!மதத்தைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு உரிமையை மறுப்பது சமூக அநீதி: மு.க. ஸ்டாலின்முஸ்லிமாக மதம் மாறியவா்கள் இடஒதுக்கீடு பெற முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!நடிகர் இம்ரான் கான் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவு!

2029-ல் முதல்வர் விஜய்தான் பிரதமரா? காங்கிரஸ் அமைச்சர் பதில்

முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமரா என்ற கேள்விக்கு காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பதிலளித்தது குறித்து...

Rahul Gandhi | Modi | Vijay

ராகுல் காந்தி | பிரதமர் மோடி | முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :

முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என சமூக ஊடகங்களில் பதிவுகள் வெளிவருவது குறித்து காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதுகுறித்து, திருச்சியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பதிலளித்துப் பேசியதாவது, "காங்கிரஸை பொருத்தவரையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்திதான், 2029-ல் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார்.

கடந்த 15 ஆண்டுகளாக மக்கள் வெறுப்பில் இருக்கின்றனர். மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். மோடி அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.

2029-ல் ராகுல் காந்திதான் பிரதமர். அவர் பிரதமராவதற்கு நாங்கள் அனைவரும் ஒத்த குரலில் பணியாற்றுவோம்" என்று தெரிவித்தார்.

சமீபமாக, முதல்வர் விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்களும் கட்சி பொதுக்கூட்டங்களில் பேசி வருகின்றனர். இதுகுறித்து, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "விஜய்தான் அடுத்த பிரதமர் என தவெக அமைச்சர்கள் கூறுவதை பெரிதாய் எடுத்துக்கொள்ள வேண்டாம்" என மறுப்பு தெரிவித்தார்.

Summary

Congress Minister Viswanathan responds to the question of whether CM Vijay will be the next Prime Minister

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.