தமிழகத்தின் முழு நேர ஆளுநராக ஆர்.வி. அர்லேகர் நியமனம்!தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் இந்திய வரலாற்றில் இடம்பெறும்: வி.டி. சதீசன்இந்தியா கூட்டணி போராட்டத்தில் திமுக ஏன் பங்கேற்க வேண்டும்? காங்கிரஸுக்கு திமுக கேள்விஅரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருள்களின் விலை உயர்வு உருவாக்கப்பட்ட பிம்பமா? - டிடிவி தினகரன்99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!

ஐயுஎம்எல் அலுவலகத்துக்கு வந்த ஒரே முதல்வர் விஜய்தான்! அமைச்சர் ஷாஜகான்

ஐயுஎம்எல் அலுவலகத்துக்கு வந்த ஒரே முதல்வர் விஜய்தான் என்று அமைச்சர் ஷாஜகான் பேசியது பற்றி...

Vijay is the only Chief Minister to have visited the IUML office: Minister Shahjahan

அமைச்சர் ஷாஜகான் - TN

Published On :

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அலுவலகத்துக்கு முதல்முறையாக வந்த முதல்வர் விஜய்தான் என்று அமைச்சர் ஷாஜகான் தெரிவித்தார்.

சிறுபான்மையினர் நலத் துறை மீது பேசிய அமைச்சர் ஷாஜகான்,

"வரலாற்றில் முதன்முறையாக நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை சமுதாயத்திற்கு 20-க்கும் அதிகமான அறிவிப்புகளை செய்த ஒரே அரசு தவெகதான். அதற்கு முதல்வர் விஜய்க்கு சிறுபான்மை சமூகம் நன்றிக்கடன் பட்டிருக்கிறது.

கிறிஸ்தவர்களின் கல்லறைத் தோட்டம், ஹஜ் மானியம் உயர்வு, புதிய மகளிர் உதவி சங்கம், காயிதே மில்லத் பெயரில் விருது, வேளாங்கண்ணி மற்றும் நாகூரில் தங்குமிடங்கள் போன்ற அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன" என்றார்.

முன்னதாக பேசிய அவர், "இந்த தவெக ஆட்சிக்கு ஐயுஎம்எல் ஆதரவு அளித்தது, அதன்படி முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்ற மறுநாள் மே 11 அன்று ஐயுஎம்எல் அலுவலகத்திற்கு வந்தார்கள்.

தேர்தல் முடிவுகள் வந்தபிறகு எங்கள் அலுவலகத்திற்கு வந்தபோதுதான் முதல்வர் விஜய் பேசினார்.

எத்தனையோ முதல்வர்களை உருவாக்கிய வரலாறு ஐயுஎம்எல் கட்சிக்கு இருக்கிறது. ஆனால், முதல்வர்கள் யாரும் எங்கள் கட்சி அலுவலகத்திற்கு வந்த வரலாறு கிடையாது. முதல்முறையாக வருகைதந்த முதல்வர் விஜய்தான்" என்று பேசினார்.

Summary

Vijay is the only Chief Minister to have visited the IUML office: Minister Shahjahan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.