
கம்யூனிஸ்ட் வரலாற்றை ஆதவ் அர்ஜுனா படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும்! மு. வீரபாண்டியன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பேட்டி..

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் - முதல்வர் விஜய் - படம் - தினமணி
தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.
மதுராந்தகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,
"தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு என்பது ஜனநாயகத்திற்காக எடுக்கப்பட்ட முடிவு. மக்கள் தீர்ப்பை மதிப்பளித்து, ஆளுநர் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என எடுத்த முடிவு. எனவே, ஆதரவு என்பது கட்சி எடுத்த முடிவு, அதுபோல ஆதரவை விலக்கிக் கொள்வது என்றாலும் அந்த முடிவையும் கட்சிதான் எடுக்க வேண்டும். செயலாளராகிய எனக்குக்கூட அந்த அதிகாரம் இல்லை. கட்சிக்குத்தான் இருக்கிறது.
அரசுக்கு ஆதரவு கொடுத்தாலும் இல்லை என்றாலும் நாங்கள் அரசின் பக்கம் அல்ல, உழைக்கும் மக்கள் பக்கம், ஏழைகளின் பக்கம். எந்த நேரத்திலும் ஆட்சியைக் கவிழ்க்கும் எண்ணம் கம்யூனிஸ்டுகளுக்கு இல்லை. அதேநேரத்தில் மதச்சார்பின்மை என்ற விவகாரத்தில் அரசு சரியான நிலைபாட்டைக் கொண்டிருக்க வேண்டும். அதில் மாறுகிறபோது நாங்கள் எதிர்ப்போம், போராடுவோம்.
பிற கட்சிகளின் ஆட்சியையும் சரி என்றால் ஆதரிப்போம், தவறு என்றால் விமர்சிப்போம். நீங்கள் (தவெக) 5 ஆண்டுகள் செய்யும் தவறுக்கு நாங்களா பதில் சொல்ல வேண்டும்? அமைச்சர்கள், கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது குற்றம்சாட்டுவதற்கு முன்பு கொஞ்சம் நிதானித்து செயல்பட வேண்டும்.
முந்தைய திமுக ஆட்சி பற்றி எங்களிடம் கேள்வி கேட்பதே தவறு. அவர்களுடன் தொகுதி உடன்பாடு. நாங்கள் உங்களுக்கு வெளியில் இருந்து ஆதரவு தெரிவித்திருக்கிறோம். அவ்வளவுதான்.
எங்கள் நூற்றாண்டு கால வரலாற்றில் நாங்கள் ஒருபோதும் யாரிடமும் கையூட்டு பெற்றதில்லை. கையூட்டை வேடிக்கை பார்த்ததுமில்லை. எனவே, ஆதவ் அர்ஜுனா, நேரம் கிடைக்கும்போது கம்யூனிஸ்ட் கட்சிகளின் வரலாற்றைப் புரட்டிப்பார்க்க வேண்டும். நீங்கள் படித்து முதல்வருக்கும் சொல்ல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இதுவரை ஊழலுக்காக எந்த கம்யூனிஸ்டுகளும் தண்டிக்கப்பட்டதில்லை. எந்தவொரு நீதிமன்றத்திலும் கம்யூனிஸ்டுகள் மீது ஊழல் வழக்கு பதியப்படவில்லை" என்றார்.
Summary
Aadhav Arjuna should study the history of the Communist and explain it to cm vijay: CPI Veerapandian
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





