தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்
தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என மு. வீரபாண்டியன் தெரிவித்தது குறித்து...
முதல்வர் விஜய் | சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்
தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலர் மு. வீரபாண்டியன் செவ்வாய்க்கிழமை (செப். 8) தெரிவித்தார்.
தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடத்தில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கத் தேவையான தனிப்பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தபோது, 5 தொகுதிகளில் வெற்றிபெற்ற காங்கிரஸ் தவெகவுடன் கூட்டணி அமைத்தது. மேலும், விசிக, ஐயூஎம்எல், இடதுசாரிக் கட்சிகள் ஆகியவை ஆதரவு தர, தவெக அரசு தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
இந்த நிலையில், தவெக ஆதரவு கட்சிகளின் 2-வது கூட்டம் சென்னையில் நாளை (செப். 9) நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தவெக ஆட்சியமைக்க ஆதரவு அளித்துள்ள கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ஐயூஎம்எல், விசிக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தக் கூட்டத்தில் பங்கேற்காது என ஏற்கெனவே அறிவித்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் பங்கேற்கப் போவதில்லை என மு. வீரபாண்டியன் இன்று தெரிவித்தார்.
மேலும், மதச்சார்பின்மை நீடிக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன், வெளியில் இருந்து தவெக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவு தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.
தவெக ஆதரவு கட்சிகளின் முதலாவது கூட்டத்திலும் இவ்விரு கட்சிகள் பங்கேற்காதது குறிப்பிடத்தக்கது.
Summary
M. Veerapandian, the State Secretary of the Communist Party of India, stated on Tuesday (Sept. 8) that the party would not participate in the TVK alliance meeting.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




