FOLLOW US

ON GOOGLE DISCOVER

தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

சட்டம் - ஒழுங்கு நிலை அதிர்ச்சியளிக்கிறது: இந்திய கம்யூ.

சென்னையில் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழக அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது குறித்து...

CPI urges the TVK government

முதல்வர் விஜய் | சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் - கோப்புப் படம்

Published On :6 செப்டம்பர் 2026, 8:06 pm IST

சென்னையில் தவெக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை வழங்கிட தமிழக அரசு உறுதி செய்திட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "சென்னை அடையாறு வண்ணாந்துறையில் ஒருவர் ஓட ஓட விரட்டப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டிருக்கிறார். இது மனதை பதைபதைக்கச் செய்கிறது.

மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆயுதங்களுடன் கும்பல்கள் சுதந்திரமாகச் செயல்படுவது காவல்துறையின் மீதான நம்பிக்கையை சீர்குலைக்கிறது. தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

காவல்துறை, குற்றம் நடந்த பின்னர் கைது செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுப்பது மட்டும் போதாது. குற்றங்கள் நடைபெறுவதற்கு முன்பே அவற்கை தடுக்கும் வகையில் செயல்பட வேண்டும்.

தமிழக அரசு சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்து வெறும் விளக்கங்களை மட்டுமே அளித்து வருவதை விட்டுவிட்டு, மக்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். குற்றச் செயல்கள் அதிகரிப்பதற்கான அடிப்படைக் காரணங்களை கண்டறிந்து போக்க வேண்டும்.

போதை மற்றும் மதுக் கலாசாரத்திற்கு தீர்வுகாண வேண்டும்.
போதை மற்றும் மதுக் கலாசாரத்திற்கு எதிராக விழிப்புணர்வு பிரசார இயக்கத்தை மாநிலம் தழுவிய முறையில் தமிழ்நாடு அரசே நடத்திட வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Summary

CPI urges the government to ensure the safety of people's lives and property in the state

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.